உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

நாரா:

சேவகன்:

நாரா:

ஜீவ:

நாரா:

3-ம் பிரபு:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

ஆஞ்ச னேயனோ அறியேம்!

(தனதுள்)

முழுப்பொய்

வாஞ்சையாய் மன்னனிவ் வாயுரை முகமன் விடுப்பனோ விடமென? குடிப்பனே!

கொற்றவ!

250 நேற்று மாலையில் நின்றிரு வாணையிற்

சென்றுழித் திருமுகம் நோக்கி யேதோ

சிந்தனை செய்துதன் சித்த மகிழ்ச்சியால்

தந்தன னெனக்கித் தரள மாலை.

(தனதுள்)

எதுவோ பொல்லாங் கெண்ணினன் திண்ணம். 255 பார்மின், பார்மின், நம்மிசை வைத்த

ஆர்வமும் அன்பும். ஆ! ஆ!

(தனதுள்) யாதும்

பேசா திருக்கி லேசுமே நம்மனம்; குறியாற் கூறுவம்; அறிகி லறிக.

(நாராயணன் செல்ல)

சாட்சியு மோகண் காட்சியாம்! இதற்கும்! 260 அங்கைப் புண்ணுக் காடியும் வேண்டுமோ? எங்கு மில்லையே யிவன்போற் சுவாமி பத்தி பண்ணுநர். சுமித்திரை பயந்த புத்திரன், வீரவா கிவர்முதற் போற்றிய எத்திறத் தவரும் இறைவ! இவனுக்

மலையாள அரசரிடம் பழகியவராகலின் இச் சொல்லை ஆள்கிறார். இவ்வாறே மலையாள நாட்டில் சிறப்பாக வழங்கும் சொற்கள் பல இந்நூலில் பயிலப்படுகின்றன.

ஆஞ்சனேயன் அனுமான். இராமனுக்கு ஆஞ்சனேயன் மெய்அடிமை பூண்டதுபோல, குடிலன் ஜீவக மன்னனுக்கு அடிமை பூண்டானோ என்பது கருத்து. திருமுகம் - கடிதம்

தரள மாலை முத்துமாலை, திண்ணம் - உறுதி.

66

'அங்கைப் புண்ணுக்கு ஆடியும் வேண்டுமோ" - கைப் புண்ணுக்குக் கண்ணாடியும் வேண்டுமோ என்னும் பழமொழி.

ஆடி - கண்ணாடி. சுவாமி பத்தி – எஜமானிடம் பக்தி. சுமித்திரை பயந்த புத்திரன் – சுமித்திரை பெற்ற பரதன்.