உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

66

விடுவது அல்லவா நல்லது!' என்று அவன் பலமுறை சொல்லிக் கொண்டதை நான் கேட்டிருக்கிறேன்." இதைக்கேட்ட அரசன், அதற்கென்ன ஐயம், குடிலரே! உண்மையான இராஜபக்தியுள்ள பலதேவன் குமாரியிடம் வாஞ்சையும் பரிவும் காட்டுவது இயல்புதானே' என்று கூறினான். “அதற் கல்ல நான் சொன்னது. அரசே! மனோன்மணி யம்மையின் சிறப்பை யெல்லாம் சேரன் அறிந்திருந்தாலும், அவன் வெறியன் ஆதலால், திருமணத்திற்கு இசைவானோ என்றுதான் என் மனம் ஐயுறுகின்றது. அவன் உறுதியான உள்ளம் உடையவன் அல்லன். மனம் போனபடி யெல்லாம் நடப்பவன் என்று தாங்களும் கேட்டிருக்கிறீர்கள்” என்றான் அமைச்சன்.

66

அரசன் கூறினான்: ஆமாம்! அறிவோம். எதைப்புகழ்வது எதை இகழ்வது என்பது அவனுக்குத் தெரியாது. வேத வியாசனே வந்து புகழ்ந்தாலும் அவன் அதனைப் பொருட்படுத்த மாட்டான் ; யாரேனும் புலையன் வந்து புகழ்ந்தால் மகிழ்வான். யாரேனும் வந்து அவன் அடியை வணங்கினால் இறுமாந்திருப்பான். செருப்புப் காலால் யாரேனும் மிதித்தால் அதனை விரும்பி உவப்பான். மலர் சூட்டினால் சினம் அடைவான்; கல்லால் அடித்தால் மகிழ்வான். பெரியார், சிறியார், பேதையர், அறிஞர், உற்றார், அயலார் என்பதைக் கருதமாட்டான். ஆனால், குடிலரே ! இவையெல்லாம் பிரபுத்து வத்துக்கு அடையாளம் அல்லவா?” இதைக்கேட்டு அமைச்சன் கூறினான்: “அடியேனுக்கு அதில் ஐயம் ஒன்று உண்டு. முடிசூடிய அரசர்களிலே கோட்டையின் பலமும், சேனைப் பலமும், நிறைந்த செல்வமும், உறுதியான எண்ணமும், பணியாத வலிமையும் தங்களுக்கு அல்லாமல் வேறு யாருக்கு உள்ளன? தங்களிடம் இல்லாத ஒரு குணத்தைப் பிரபுத்துவம் என்று யார் கூறுவார்கள்? இது எப்படிப் பொருந்தும்? சேரன் தாய் தந்தையருக்குக் கீழடங்கி வளர்ந்தவன் அல்லன் என்பதைத் தாங்கள் கருதவில்லை போலும்! நல்லது கெட்டது என்பதை அவன் அறியவில்லையானால், நாம் கூறும் நல்லதை அவன் எப்படி ஏற்றுக்கொள்வான் என்று தான் என் மனம் நினைக்கிறது.

66

“நீர் சொல்லுவது சரி! நமது குருநாதர் சொல்லை மீறக்கூடாது என்பதற்குத்தானே நாம் பலதேவனைத் தூது அனுப்பினோம்? நான் கூறுவதை அவன் விரும்பாவிட்டால் அது அவன் விதி. நமக்கென்ன? மனோன்மணிக்கு மணவாளர்களா கிடையாது?” என்றான் அரசன். “அதற்கென்ன? ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். அதல்ல, அரசே!

66