உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

66

153

'அது இருக்கட்டும். வாணி! உன் பாட்டைக் கேட்டு நெடு நாளாயிற்று. இப்போது ஒரு பாட்டுப் பாடு" என்றாள் மனோன்மணி.

“என் பாட்டைத்தான் எல்லோரும் தெரிந்திருக்கிறார்களே! உங்கள் பாடுதான் ஒருவருக்கும் தெரியாது.

66

'வாணி! இப்போது இதுபற்றிப் பேசவேண்டாம். இதை யெல்லாம் மறக்க நீ ஒரு பாட்டுப் பாடு" என்று மனோன்மணி விரும்பினாள். நீ வாணி அதற்கிணங்கி வீணை வாசித்துக்கொண்டு சிவகாமி சரிதத்தைப் பாடுகிறாள், அவள் பாடிய சிவகாமியின் கதை இது:-

காடெங்கும் திசைதெரியாமல் அலைந்து திரிந்து அலுத்துப் போன ஒரு வாலிபன், காட்டில் ஒரு முனிவனைக் கண்டு வணங்கிக் கூறினான்: “அடிகளே! வழிதெரியாமல் அலைகிற அடியேனுக்கு ஒரு வழி கூறவேண்டும். அளவைக் குறிக்காமலே நிழலை அளப்பது போல, இந்தக் காடு முழுவதும் அலைந்து திரிந்தேன். காடோ வளர்ந்து கொண்டே போகிறது. இரவும் வந்துவிட்டது. இனி நடக்க இயலாது. நான் தங்க ஒரு இடம் காட்டியருளவேண்டும்" என்று கேட்டான். வாலிபனின் வேண்டுகோளைக் கேட்ட முனிவர் கூறினார்: “வீடு என்றும் மடம் என்றும் எனக்குக் கிடையாது. ஏகாந்தப் பெருவெளிதான் என்னுடைய வீடு. ஆசையெல்லாம் துறந்த வீரர்கள்தாம் என் வீட்டையடைய முடியும். இங்கே, பாயும் பூவணையும் கிடையாது. பாலுணவு கிடைக்காது. இளைஞனே! நீ விரும்பினால் என்னுடன் வா. இல்லை யானால் நீ விரும்பிய இடம் போய்க்கொள்.’ இவ்வாறு முனிவர் கூறியதைக் கேட்ட வாலிபன், ஏதோ ஒரு நினைவு தூண்ட, முனிவரை வணங்கி அந்த முனிவரின் பின்னாலே நடந்தான்.

و,

கரிய திரைச்சீலைகள் திசை தெரியாமல் மூடிக்கொண்டது போல இரவு வந்தது. வானத்திலே விண்மீன்கள் வெளிப்பட்டு ஒன்றோ டொன்று ஏதோ இரகசியம் பேசிப் புன்முறுவல் பூப்பது போலத் தோன்றின. இணைபிரிந்த அன்றில் பறவைகள் ஏங்கிக் கூவின. வௌவால்கள் பறந்தன. மின்மினிப் பூச்சிகள் மினுமினுத்து வெளிச்சந் தந்தன. அந்த இருண்ட காட்டிலே பாம்பின் தலையில் உள்ள மாணிக்க மணியும், யானைகளின் வெண்மையான தந்தங்களும், புலிகளின் அனல் போன்ற விழிகளும் ஒளிகொடுத்தன. ஊசி சென்ற வழியே நூல் செல்வதுபோல, முனிவரைப் பின்தொடர்ந்து வாலிபன் நடந்தான். முனிவர் புதர்களில் நுழைந்தும் மலையேறியும் குகையில் இழிந்தும்