உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

155

திக்குப் பாவியாகிய நான் மகளாகப் பிறந்தேன். அந்த ஆண்மகனுக்கு ஒரு பிள்ளை. அந்தப் பிள்ளையும் நானும் சிறு வயதில் ஒன்றாக வளர்ந்தோம். அவர் அழகர். அன்புள்ளவர். அவர் பெயரை என் நா கூறாது.” இதைக் கேட்ட முனிவரின் உடல் சிலிர்த்தது. கண்களில் நீர் வழிந்தது. அவர் அதை மறைப்பதற்கு நெருப்பில் விறகு இடுபவர்போலத் திரும்பினார்.

மங்கை மேலும் கூறினாள்: “பிள்ளைப்பேறற்ற என் சிறிய தாய் பெருஞ்செல்வம் படைத்தவள். அவள் அச் செல்வம் முழுவதையும் எனக்குக் கொடுத்தாள். பாவி, நான் அச் செல்வத்தினால் மதி மயங்கினேன். அவரை நான் அசட்டை செய்தேன். பொருளுக்காகப் பொய்க்காதல் பேசி என்னை மணக்கப் பலர் வந்தார்கள். என் காதலரைத் தவிர நான் அவர்களை விரும்பினேன் இல்லை. ஆனால், செல்வச் செருக்கால், குறும்புத் தனத்தால் செருக்குக் கொண்டேன். அவர் தமது கருத்தைக் குறிப்பாக உணர்த்தியும் நான் வாளா இருந்தேன். கடைசியில் அவர் என்னைவிட்டு அகன்றார். அவரைத் தேடினேன், காணப்படவில்லை. பலநாள் தேடினேன். கிடைக்க வில்லை. நெடுநாள் தேடியும் அவர் இருந்த இடம் தெரியவில்லை. கடைசியாக அவரைக் கண்டுபிடிப்பது, இல்லையேல் உயிரை மாய்ப்பது என்று தீர்மானஞ் செய்து ஆண் வேடந்தாங்கி அலைந்து திரிந்தேன். எங்கேயும் தேடினேன். பல இடங்களில் அலைந்தேன். காணாமல் அலுப்படைந் தேன். இதுவரையிலும் அவரைக் கண்டேன் இல்லை. முனிவர் பெருமானே! என் காதலரின் சாயல் உம்மிடம் இருப்பதைக் காண்கிறேன். ஆகையால் தான் என் கதையை உம்மிடம் கூறினேன். இனி நான் உயிர்வாழ்ந்து பயனில்லை. இதோ இந்தத் தீயே எனக்குக் கதி” என்று சொல்லி மூண் டெழுகின்ற தீயில் பாய்ந்தாள். மின்னல்போல முனிவர் பாய்ந்து அவளைப் பிடித்துத் தடுத்தார். “சிவகாமி! நான்தான் உன்னுடைய சிதம்பரன்!” என்று கூறினார். அவர் நா குளறிற்று. சிவகாமியும் சிதம்பரரும் ஒன்றாயினர். பார்வதியும், சரசுவதியும், இலக்குமியும் வந்து அவர்களை வாழ்த்தினார்கள். அருந்ததியும் வந்து ஆசி கூறினாள்.

இந்தச் சிவகாமி சரிதத்தை வாணி இசைப்பாட்டாகப் பாடினாள். கேட்ட மனோன்மணி வாணியைப் பாராட்டினாள். பிறகு, “வாணி! உன் காதலன் எங்கிருக்கிறார்?” என்று வினவினாள்.

“என் மனத்தில் இருக்கிறார்."