உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜீவகன்:

குடிலன்:

LO

5

10

மூன்றாம் அங்கம்

இடம் :

முதற் களம்

பாண்டியன் அரண்மனை.

காலம்: காலை.

(ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை)

(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச! நின் தனையன் பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக் குரியன முற்றும் ஒருங்கே முடித்து

வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும் உபாயமும் யாவும் உடையான்; அதனால் அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்! வீண்! பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக் கிலையிலை ஐயம் சிறிதும். உலகத்து இயற்கை யறியா இளையோ னாகிலும் முயற்சியின் மதியின் முதியோன் எனவே மொழிகுவர், அவனாற் பழுதிலை. கொற்றவ! வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார். நஞ்சினும் கொடிய நெஞ்சினர், அவர் தாம் கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சிடிற் கெஞ்சுவர்; 15 என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால் மன்னவ! சற்றே மருளும் என்னுள்ளம். அன்றியும் புருடோத் தமனெனும் அரசன் கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும்.

சூழ் - சூழ்ச்சி, யோசனை. தனையன் - மகன். ஐயுறல் - ஐயப்படாதே. பழுது உறும் - குற்றம் நேரும். மிஞ்சுவர் - மீறுவார்கள். தொன்மொழி பழமொழி. கன்றும் - கோபிக்கும்.