உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

முன்னிரு கையில் வெந்துறக் கிடத்தி, 20 மார்பொடு வயிறும் சோர்வுறக் கடித்துப் பறித்திழுத் திசித்துக் கறிக்கமற் றவ்ஈ நொந்துநொந் தந்தோ! சிந்தனை மயங்கி எய்யா தையோ! என்றழு குரலிங்கு யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்? கைகால் மிகில்நம் மெய்வே றாமோ? நோவும் சாவும் ஒன்றே, அன்றியும்

25

30

உலகெலாம் நோக்கில்நம் உடலொரு பொருளோ?

பஞ்சா சத்கோடி யெனப்பலர் போற்ற

எஞ்சா திருந்த இப்புவி அனைத்தும்

இரவியின் மண்டலத் தொருசிறு திவலை. பரவிய வானிடை விரவிய மீனினம் இரவியில் எத்தனை பெரியஒவ் வொன்றும்! இரவியும் இம்மீன் இனங்களும் கூடில்

ஒருபிர மாண்டமென் றுரைப்பர் இதுபோல் 35 ஆயிரத் தெட்டுமற் றுண்டென அறைவர். ஆயிரத் தெட்டெனல் அலகிலை என்பதே. இப்பெரும் உலகெலாம் ஒப்பறு திருமால் உந்தியந் தடாகத் துதித்தபன் முளரியில் வந்ததோர் நறுமலர் தந்தபல் லிதழில்

40 ஓரிதழ் அதனில் ஓர்சார் உதித்த

201

வெந்துற – முதுகு பொருந்தும்படி. இசித்து - இழுத்து; இது கொச்சைச் சொல் என்று சிலர் இகழ்வர். இச்சொல் குண்டலகேசி காவியத்திலும் பயிலப்பட்டுள்ளது. (புறத்திரட்டு 411-ஆம் செய்யுள் காண்க.) கறிக்க கடிக்க. எய்யாது ஒழியாமல் பஞ்சா சத்கோடி - ஐம்பது கோடி. 28-29 வரிகள், இந்தப் பூமி ஐம்பதுகோடி யோசனை பரப்புள்ளது என்னும் புராணக் கருத்தைக் கூறுகின்றன.

இரவியின் மண்டலம் - சூரிய மண்டலம்; சூரிய மண்டலத்தில் பல அண்டங்கள் அடங்கியுள்ளன. மீனினம் நட்சத்திரத் தொகுதி. அலகிலை – ல அளவில்லாதது. ஒப்பறு ஒப்பில்லாத. உந்தி கொப்பூழ். முளரி - தாமரை.

― -