உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் களம்

இடம் : சுந்தரமுனிவர் ஆசிரமம்.

காலம்: வைகறை.

(நிஷ்டாபரர் கருணாகரர் இருவரும் அளவளாவி இருக்க.)

நிஷ்டாபரர்:

10

(நேரிசை ஆசிரியப்பா)

ஏதிஃ துமக்குமோ இத்தனை மயக்கம்? வேதவே தாந்தம் ஓதிநீர் தெளிந்தும் இரவெலாம் இப்படி இமையிமை யாதே பரிதபித் திருந்தீர்! கருணா கரரே!

5 பாரினிற் புதிதோ போரெனப் புகல்வது! போரிலை ஆயினென்? யாருறார் மரணம்? எத்தினம் உலகில் எமன்வரா நற்றினம்? இத்தினம் இறந்தோர் எத்தனை என்பீர்? ஒவ்வொரு தினமும் இவ்வனம் ஒன்றில், எறும்பு முதலா எண்ணிலா உயிர்கள் உறுந்துயர் கணக்கிட் டுரைப்போர் யாவர்? சற்றிதோ மனங்கொடுத் துற்றுநீர் பாரும். குரூரக் கூற்றின் விரூபமிச் சிலந்தி! பல்குழி நிறைந்த பசையறு தன்முகத்து 15 அல்குடி யிருக்க, அருளிலாக் குண்டுகண் தீயெழத் திரித்துப் பேழ்வாய் திறந்து

கருக்கொளும் சினைஈ வெருக்கொளக் கௌவி விரித்தெண் திசையிலும் நிறுத்திய கரங்களின்

பரிதபித்து வருந்தி. உறார் - அடையமாட்டார். எமன் - சாவு. குரூரக் கூற்றின் கொடுமையுள்ள எமனுடைய. விரூபம் - அவலட்சணம். சிலந்தி – சிலந்திப் பூச்சி. பசை அறு - இரக்கம் இல்லாத. அல் இரவு, இருட்டு. பேழ் - பெரிய. வெருக்கொள - அஞ்சும்படி. கரங்கள் - சிலந்தியின் கால்கள்.