உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

பலதேவன், “பணம் பணம் என்று பதைக்கிறாய், பிணமே! என் நெஞ்சில் புண்பட்டு நிற்கிறேன். வீணாகப் பேசாதே" என்று சினந்து பேசிவிட்டுப் போய்விடுகிறான்.

66

குடிலன், “இதுவும் தலைவிதி! இவனுடன் பேசிப் பயன் என்ன? நான் செய்த சூழ்ச்சிகள் எல்லாம் பாழாயின! போகட்டும்! இனிப் புதுவழியைக் காணவேண்டும். ஆம்; நாராயணன் இருக்கும் வரையில் நமது நோக்கம் ஒன்றும் நிறைவேறாது. அவனை ஒழிக்கும் உபாயம் என்ன?” என்று தனக்குள் கூறிக்கொண்டே செல்கிறான்.

66

நான்காம் களம்

அரண்மனையில் ஜீவகனும் குடிலனும் ஆலோசனை செய்கின் றனர். பலதேவனும் ஒருபுறம் நிற்கிறான். ஜீவகன் ஆத்திரத்துடன், குடிலரே! இது என்ன ஆச்சரியம்! கோட்டையின் அகழியை ஒரு பக்கத்தில் பகைவர் தூர்த்துவிட்டனர் என்று அந்தப்புரத்துப் பெண்கள் கூறினர். இதுவரை நான் அதை அறியவில்லை. அது உண்மைதானா?” என்று கேட்டான்.

நாராயணனை ஒழிப்பதற்கு இதுவே தகுந்த சமயம் என்று எண்ணிக் கொண்டு குடிலன், “ஒருபுறம் மட்டுமா!” என்றான்.

அரசன்மேலும் ஆத்திரம் அடைந்து, “என்ன! என்ன!” என்றான். "அரசே ! இந்தச் சூதை என்ன என்று சொல்வேன்!”

66

"கோட்டை மதில்மேல் இருந்த ஆயுதங்கள் எல்லாம் என்ன வாயின ?”

“கர்த்தா இல்லையானால், கருவிகள் என்ன செய்யும்!"

66

“காவல் இல்லையோ ? அங்கிருந்த சேவகர் யார்?”

குடிலன் கூறினான்: “எட்டாயிரம் போர் வீரரைக் கோட்டையில் காவல் வைத்தோம்; நாராயணரைத் தலைவர் ஆக்கினோம். ஆனால் நாராயணர் ... அவரைத்தான் போர்க்களத்தில் பார்த்தோமே!"

அரசன்: “ஆமாம்! போர்க்களத்திலே பார்த்தோம்! காவலை விட்டு விட்டா வந்தான்?”