உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

225

குடிலன்: “அவரைவிட நமக்கு உண்மையாளர் யார்? வேலியே பயிரை மேய்கிறது என்றால், தெய்வந்தான் காப்பாற்ற வேண்டும்,"

அரசன்: “துரோகம் ! துரோகம் !”

குடிலன்: “துரோகம் அல்ல, அரசே ! அடியேன்மேலுள்ள விரோதம் ! அரசருக்கு அவர் துரோகம் செய்யவில்லை.”

அரசன்: "கெடுபயல் ! துரோகி ! அவனை விடப்போவதில்லை!”

குடிலன், “ஐயோ ! சுவாமி ! எலியைக் கொல்ல வீட்டுக்குத் தீ கொளுத்திய கதையாக இருக்கிறது ! அவருக்கு அமைச்சர் பதவியும் முதன்மை இடமும் வேண்டும் என்று கேட்டால் தாங்களே மகிழ்ச்சி யுடன் அளித்திருப்பீர்களே! அவ்வளவு அன்புவைத்திருக்கிறீர்கள் அவர்மேல்" என்று கூறி அழுகிறான்.

“அவ்வளவு துட்டனா? இவ்வளவு கொடியவன் என்று நாம் சற்றும் நினைக்கவில்லை? என்றான் அரசன்.

66

"அடியேனுக்கு இந்த அமைச்சா பெரிது? வெளிப்படையாகச் சொல்லியிருந்தால் நானே இந்தப் பதவியை மகிழ்ச்சியோடு கொடுத் திருப்பேனே! இதை மனத்தில் வைத்துக் கொண்டு, போர்க்களத்திலே இப்படிச் செய்வது தகுதியா!” என்று கூறி பலதேவனுடைய மார்பைச் சுட்டிக் காட்டினான்.

"யார், யார்! நாராயணனா இப்படிச் செய்தான்!”

66

'அவர் நேரில் செய்யவில்லை. அவர் ஏவலினால் ஒருவன் செய்தான்” என்றான் பலதேவன்.

66

'அப்படியா! அவனைச் சிரத்சேதம் செய்கிறேன். போர்க் களத்தில் இடது பக்கத்தில் குழப்பம் உண்டானது அவனால் தான் போலும் !”

66

முழுவதும் அவனால்தான் குழப்பம். நமது மானத்தைக் கெடுத்தான். போருக்கிடையில் குழப்பத்தை உண்டாக்கினான் என்றான் குடிலன்.

அரசன், ஒரு சேவகனிடம் நாராயணனை அழைத்துவரக் கட்டளையிட்டான். “இத்தனைத் துட்டனா இவன்? ஏன் இப்படிச் செய்தான்?” என்றான்.