உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

223

என்று கூறினான். அருகிலிருந்த குடிலன் தூதுவனைப் பார்த்து, “நீ தூதுவன், கொண்டுவந்த செய்தியைச் சொல்லிவிட்டு, மறுமொழியைக் கொண்டுபோக வேண்டியவன் நீ. பழிச் சொற்களைப் பேசினால் உன் உயிர்போய்விடும். உடனே போய்விடு” என்று கூறினான். “அப்படியே! இனி போரைப்பற்றி வேறொன்றில்லை” என்று கூறித் தூதுவன் போய் விடுகிறான்.

ஜீவகன், “நீரும் தாரும் வேண்டுமாம்! மானம் போனபின் வாழ்வு எதற்கு? இதுகாறும் பாண்டியகுலம் ஒருவருக்கு அடிபணிந்ததில்லை. ஆற்றுநீரும் வேப்பமாலையும் கொடுத்து விட்டு நாணம் இல்லாமல் உயிர் வாழ்வதைவிட உயிர் விடுவேதே மேல். குடிலரே! எதுவாயினும் ஆகட்டும். போருக்குச் செல்வோம். இப்போது மனோன்மணியைக் கண்டு அவளைத் தேற்றி வருவோம். நான் வருமளவும் இங்கேயே இரும் என்று சொல்லி இளவரசி மனோன்மணியைக் காணச் சென்றான்.

و,

அரசன் சென்ற பிறகு குடிலன், “இனி என்ன! உனக்குக் கேடு காலந்தான். இரண்டுமுறை நீ தப்பினாய். அந்தத் தப்பிலிப் பயல், நாராயணன் உன்னைத் தப்பச் செய்து என் சூழ்ச்சியைக் கெடுத்தான் என்று சொல்லித் தன் மகன் பலதேவனைப் பார்த்து "இதற்கெல்லாம் காரணம்....” என்று கூறிய போது, பலதேவன் குறுக்கிட்டு, “இதுபோல உன் நெஞ்சில் வேல் பாய்ந்தால் உனக்குத் தெரியும்" என்று கூறினான். குடிலன், 'அது உன்னால் ஏற்பட்டது”என்றான்.

66

66

பலதேவன், அரசனைக் குத்திக் கொல்ல எண்ணினாய். ஊழ் வினை என்னைக் குத்திவிட்டது. அது யார் பிழை?" என்றான்.

66

குடிலன்: “உன் பாழான வாயைத் திறக்காதே. ஊரிலே பகை வைத்துக்கொள்ளாதே என்று பலமுறை சொன்னேன். பகையை உண்டாக்கிக்கொண்டு ஊழ்வினை ஊழ்வினை என்கிறாய்.

وو

பலதேவன்: “காதல் செய்வது பகை உண்டாக்குவதோ. பாவி!”

குடிலன்: "நீயும் உன் காதலும்! பேய்ப்பயல்! உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனம் எரிகிறது. அருமையாகச் சேர்த்த பணத்தை எல்லாம் பாழ்படுத்திக்கொண்டு ....

و,