உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

249

நாரா:

2-ம் படை:

நாரா:

(முதற்படைஞன் போக)

ஆம்பொழு தழைப்போம். வாம்பரி அமர்மின்

(தனதுள்)

(கோட்டைமேல் உலாவி நின்று)

அரும்படை இரண்டும் அதோ! கை கலந்தன. வரும்பழி யாதோ? மன்னவர்க் கேதோ? 100 ஆவதிங் கறியேன்! ஜீவக! ஜீவகா!

முற்றுநான் அறிவன்நின் குற்றமும் குணமும். குற்றமற் றென்னுள கூறற் குன்வயின்? வித்தையும் உன்பெருஞ் சத்திய விருப்பமும் உத்தம ஒழுக்கமும் எத்துணைத் தையோ! 105 வறிதாக் கினையே வாளா அனைத்தும் அறியா தொருவனை யமைச்சா நம்பி! இன்னதொன் றன்றிமற் றென்பிழை உன்னுழை மன்னவன் நல்லனா வாய்க்குதல் போல என்னுள தரியவற் றரியதிவ் வுலகில்?

110 வாய்த்துமிங் குனைப்போல் வாணாள் வறிதாத் தீத்திறல் ஒருவன் சேர்க்கையால் வீதல்

மண்ணுளோர் பண்ணிய புண்ணியக் குறைவே; சுதந்தரம் அறுவோர்க் கிதந்தீங் குண்டோ? கூறுவோர் அறிவின் குறைவே; வேறென்

115 அன்றியும் உன்மிசை நின்றிடும் பெரும்பிழை ஆயிரம் ஆயினும் தாய்மனோன் மணிநிலை கருதுவர் உன்னலம் கருதா தென்செய்வர்? வருவது வருக! புரிகுவம் நன்மை. (2-ம் படைஞனை நோக்கி)

முருகன் வரவிலை?

வருவன் விரைவில்

120 அதுவென் ஆ! ஆ!

ஆம்பொழுது

வேண்டியபோது. வாம்பரி தாவி ஓடுகின்ற

குதிரை. உன்வயின் -உன்னிடத்தில் . வாளா - சும்மா. உன்னுழை - உன்னிடத்தில். வீதல் -அழிதல், சாதல்.