உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

2-ம் படை

நாரா:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

ஆ! ஆ! அறியோம்!

பலதே வன்படை அலவோ?

2-ம் படை:

ஆம்! ஆம்!

நாரா:

மன்னவன்?

2-ம் படை:

நடுவே.

நாரா:

வலப்புறம்?

2-LD 60L:

குடிலன்.

நாரா:

என்னையிக் குழப்பம் இடப்புறம்?

2-ம் படை:

ஏதோ!

நாரா:

முதற் படை: நாரா:

வருவது முருகன் போலும். முருகா!

125 வயப்பரி வீரரே! மன்னவர்க் கபஜயம்,

(படைவீரரை நோக்கி)

(முருகன் வர)

இமைப்பள வின்கண் எய்தினும் எய்தும். இம்மெனும் முன்னநாம் எய்துவோம் வம்மின்! வந்தனர் ஈதோ மற்றைய வீரரும்.

தந்தனம் உனக்கவர் தலைமை. நொடியில் 130 வலப்புறம் செலுத்துதி. மன்னவன் பத்திரம். இருபுறம் காக்குதும், வருகவென் அருகே! (முருகன் காதில்)

குடிலனை நம்பலை.

முதற் படை:

நாரா:

அடியேன் அறிவேன்.

அறிந்தவா றாற்றுதி! மறந்திடேல் மெய்ம்மை! வம்மின் வீரரே! வம்மின்!

135 உம்வயின் உளதுநம் செம்மல துயிரே.

1

(யாவரும் விரைவாய்க் குதிரைமேற் செல்ல)

நான்காம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.

வயப்பரி - வலிமையுள்ள குதிரை. அபஜயம் - தோல்வி. எய்தும் - அடையும், உண்டாகும். ஆற்றுதி - செய்வாயாக. செம்மலது உயிர் அரசனுடைய உயிர்.