உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

தூதன்:

குடி:

தூதன்:

குடி:

ஜீவ:

ஐயோ! கைதவா! ஆய்ந்திலை உன்றன் 245 மெய்யாம் இயல்பு. மிகுமுன் சேனையின் தீரமும் திறமும் உனதரும் வீரமும்

கண்முற் படுமுன் கவர்ந்தசே ரற்கிம்

மண்வலி கவர்தலோ வலிதென் றுன்னினை? என்மதி குறித்தாய்! எடுத்தகைப் பிள்ளாய்! 250 நில்லாய் தூதுவ! நின்தொழில் உன்னிறை சொல்லிய வண்ணம் சொல்லி யாங்கள் தரும்விடை கொடுபோய்ச் சாற்றலே அன்றி விரவிய பழிப்புரை விளம்புதல் அன்றே. அதனால் உன்னுயிர் அவாவினை யாயின் 255 விரைவா யேகுதி விடுத்தவன் இடத்தே.

குடிலா! உன்மனப் படியே! வந்தனம். மருவிய போரினி வைகறை வரையிலை. இரவினில் வாழுமின் இவ்வர ணகத்தே.

தூதிது சூதே, சொன்னேன் அன்றோ?

263

(தூதுவன் போக)

260 ஏதமில் மெய்ம்மையே ஆயினும் என்னை? நீரும் தாரும் யாரே அளிப்பர்?

எனவோ அவைதாம்? யாதே வரினும் மனவலி ஒல்கலை மானமே பெரிது. சிதைவிடத் துரவோர் பதையார் சிறிதும்

265 புதைபடுங் கணைக்குப் புறங்கொடா தும்பல். மதிகுல மிதுகா றொருவரை வணங்கித் தாழ்ந்துபின் நின்று வாழ்ந்ததும் அன்று!

நொச்சி - நொச்சி மாலை: கோட்டையைச் சூழ்ந்து முற்றுகையிடு வோரைக் கோட்டையின் உள்ளிருந்து போர் செய்வோர் அணியும் மாலை. கோட்டைக்குள்ளிருந்து பகைவரை எதிர்க்கும் போருக்கு நொச்சிப் போர் என்பது பெயர். ஏதம் - குற்றம். ஒல்கலை - தளராதே. உரவோர் – மனவலி யுடையவர். உம்பல் - யானை.

265. இந்த அடி, “சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பின், பட்டுப்பா டூன்றுங் களிறு” என்னும் திருக்குறளின் கருத்துள்ளது