உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

210 பெரிதுநம் அபாயம்! பேணி அதற்குநீர்

உரியதோர் கௌரவம் உடையராய் நடமின். விடுமின் வெகுளியும் வீண்விளை யாட்டும். படையெனப் படுவது கரையிலாக் கருங்கடல். அடலோ தடையதற்கு? ஆணையே அணையாம். 215 உடைபடின் உலகெலாம் கெடுமொரு கணத்தில் கருமருந் தறையிற் சிறுபொறி சிதறினும் பெருநெருப் பன்றோ? பின்பார் தடுப்பர்?

அதனால் அன்பரே! ஆணைக்கு அடங்குமின்.

குடி:

(மூச்சு விட்டு)

நாரா:

1-ம் சேவ:

நாரா:

ஆ!

இதுபோல் இல்லை யெனக்குப காரம்!

(மௌனம்)

220 இரந்தேன். அடங்குமின்! இரங்குமின் எமக்கா!

நாரா யணரே! நவின் றவை மெய்யே! ஆரே ஆயினும் சகிப்பர் அநீதி!

ஏதுநீர் அநீதியென் றெண்ணினீர்? நண்பரே! ஓதிய அரசன் ஆணையை மீறி

225 எனதுளப் படிபோர்க் கேகிய அதற்கா மனுமுறைப் படிநம் மன்னவன் விதித்த தண்டனை யோவநி யாயம்? அலதியான்

உண்டசோற் றுரிமையும் ஒருங்கே மறந்துமற் றண்டிய அரச குலத்திற் கபாயம்

230 உற்றதோர் காலை உட்பகை பெருக்கிக்

குற்றமில் பாண்டிற் கற்றமில் கேடு

பண்ணினேன் என்னப் பலதலை முறையோர்

எண்ணிடும் பெரும்பழிக் கென்பெயர் அதனை ஆளாக் கிடநீர் வாளா முயலலோ

235 யாதே அநீதி? ஓதுமின். அதனால்

அடலோ வீரமோ, வலிவோ, ஆணை - கட்டளை. கருமருந்து வெடி மருந்து இருக்கும் அறை. பொறி தீப்பொறி.

அறை

இரந்தேன்

வேண்டினேன். பாண்டிக்கு

பாண்டி நாட்டுக்கு.

அற்றம் இல் - முடிவு இல்லாத. வாளா - வீணாக.