உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

279

என்புகழ் விரும்புவி ராயின், நண்பரே! ஏகுமின் அவரவர் இடத்திற் கொருங்கே!

1-ம் சேவ:

எங்கினி ஏகுவம் இங்குனை இழந்தே?

2-ம் சேவ:

நாரா:

உன்கருத் திருப்பிற் குரியதோ இவ்விதி?

240 கருத்தெலாம் காண்போன் கடவுள், விரித்த கருமமே உலகம் காணற் குரிய.

ஒருவனோ அலதிவ் வுலகமோ பெரிது? கருதுமின் நன்றாய். காக்குமின் அரசனை. செல்லுமின். நில்லீர்! செல்லிலென் றனக்கு

245 நல்லீர் மிகவும்!

சேவ;

நாரா:

முரு:

நாரா:

முரு:

நாரா யணரே!

உமக்காங் கொடிய கழுமரம் எமக்கும் நன்றே என்றே நின்றோம் அன்றிக்

கெடுதியொன் றெண்ணிலம். கொடுமதற் கநுமதி.

தென்னவன் சிறைசெயச் செப்பினன்; அதனால் 250 இன்னம் பிழைப்பேன் இக்கழு, உமக்கியான் சொன்னவா றடங்கித் துண்ணென ஏகில். இல்லையேல் எனக்கினி எய்துவ தறியேன். வல்லைநீர் செல்லுமின்! செல்லுமின்! வந்தனம். செல்லுமின்! சத்தியம் செயிக்கும்! செயிக்கும்!

255 நல்லது! நல்லது!

(படைஞர் விடைபெற்றுப் போக)

நாரா யணரே!

நுஞ்சொல் என்சிரம். ஆயினும் நுஞ்செயல் சரியோ என்றெனக் குறுவதோர் ஐயம். சத்தியம் செயிக்கும் என்றீர். எத்திறம்?

குடிலன் தனக்கநு கூலமாய் அனைத்தும் 260 முடிவது கண்டும் மொழிந்தீர் முறைமை!

பொறு! பொறு! முடிவில் அறிகுவை.

முடியும்

தருணம் யாதோ? மரணமோ என்றால்,

தென்னவன் – பாண்டியன். துண்ணென விரைவாக. வல்லை – விரைவாக, எத்திறம் - எப்படி.