உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் அங்கத்தின் விளக்கம்

முதற் களம்

அமைச்சன் குடிலன், அரண்மனையில் சுந்தரமுனிவர் அமைத்த சுரங்க வழியைக் கண்டுபிடித்து அதன் வழியாக இறங்கிச் சென்றான். அவ்வழி, கோட்டைக்கும், சேரமன்னன் இருந்த பாசறைக்கும் இடையேயுள்ள வெளியிடத்தில் கொண்டுபோய் விட்டது. இரவு நேரம். குடிலனுக்குப் புதிய யோசனை உண்டாயிற்று. நேரே சேரன் இருக்கும் பாசறைக்குச் சென்று தன் எண்ணத்தைத் தெரிவித்தால் அதற்கு அவன் உடன்படுவான். ஆண்டுதோறும் தாம்பிரபரணி நீரும் வேப்பந் தாரும் அனுப்பிக்கொண்டேயிருந்தால், அவன் தன்னையே அரசனாக்குவான் என்று அவன் சிந்தித்தான். “பலதேவனுக்கும் மனோன்மணிக்கும் திருமணம் நடந்தால் என்ன? நடக்காவிட்டால் என்ன? இப்பொழுதே என்னை அவன் எதிர்த்துப் பேசுகிறான். படைவீரர்கள் நம்மை வெறுக்கிறார்கள். சேரனைக் கண்டு வணங்கி நயமாகப் பேசினால், அவன் இணங்கி விடுவான்! ஆஆ ! நமது அறிவே அறிவு! ஊழ் என்றும் தலைவிதி என்றும் பேசுவது எல்லாம் வீண்பேச்சு! இந்தச் சுரங்க வழி நமக்கு நல்லதாக அமைந்தது” என்று நினைத்துக் கொண்டே நடந்தான். நடந்து, சேரன் பாசறைக்கு அருகில் சென்றான்.

அவ்வமயம் சேரமன்னன் புருடோத்தமன் உறக்கம் இல்லாமல் அங்குத் தன்னந்தனியனாக உலாவிக்கொண்டிருந்தான். அவன் தன் கனவில் அடிக்கடி தோன்றும் நங்கையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே உலவுகிறான். அவனைக் கண்ட குடிலன் வியப்படைந்தான். 'இவன் மனிதன் அல்லன் தேவனோ? கந்தருவன்போலக் காணப் படுகிறான்!” என்று எண்ணினான். சேர அரசன் புருடோத்தமன் மெல்ல நடந்து அவ்விடம் வந்தபோது குடிலனைக் கண்டான். அயலான் என அறிந்து, யார்? உன் பெயர் என்ன?” என்று கேட்டான்.

66

66

"அடியேன், குடிலன்" என்றான் அமைச்சன்.

“இந்த நேரத்தில் இங்கு வரக் காரணம் என்ன?”