உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

303

அவ்வேளையில் சுரங்க வழியாக அருள்வரதன் முதலியவருடன் புருடோத்தமன் அங்கு வருகிறான். குடிலனைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளச் சுரங்கத்தில் சேவகரிடம் விட்டு, புருடோத்தமனும் சேனாபதி யும் அறையில் நுழைகின்றனர். திரைமறைவில் இருந்தபடியே, திரைக்கப்பால் காணப்படும் காட்சிகளை விளக்கு வெளிச்சத்தில் நன்றாகக் காண்கின்றனர். புருடோத்தமன், சுந்தர முனிவரும் நடராஜனும் மண்டபத்தில் இருப்பதைக் கண்டு வியப்படைகிறான். ‘இதென்ன! மந்திராலோசனை நடைபெறுகிறதோ! அலங்காரங் களும் மாலைகளும் இருப்பதைப் பார்த்தால் மணவறைபோல இருக்கிறது. நல்லது; இந்தத் திரைமறைவில் நின்று நடப்பதைப் பார்ப்போம் !' என்று தனக்குள் எண்ணிக்கொள்கிறான்.

66

அந்தச் சமயத்தில் பாண்டியன் கூறுகிறான்: அடிகளே! அமைச்சர்களே! வீரர்களே! கேளுங்கள். நமது இளவரசியைக் காப்பதற்காக இங்குக் கூடியிருக்கிறோம். இன்று காலை போர்க் களத்தில் நமக்கு ஓர் இழுக்கு நேர்ந்தது. அந்த இழுக்கை நாளைக் காலையில் போர்க்களத்தில் வெற்றி கொண்டாவது, உயிர் கொடுத் தாவது நீக்குவோம். அதற்கு முன் நமது இளவரசிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடிக்கவேண்டும்.

66

குடிலரை அறியாதவர் யார் ? அவரைப்போல அறிவும் சூழ்ச்சியும் ண்மையும் உறுதியும் பக்தியும் சத்தியமும் உடையவர் வேறு யார் உள்ளனர் ! தன்னலம் இல்லாமல் நமக்காக உழைக்கின்றார். பாருங்கள்; இப்போதுங்கூட இந்த நடுஇரவில் அவர் எங்கேயோ சென்று நமக்காகப் பாடுபடுகிறார். இப்படிப்பட்ட அமைச்சரைப் பெற்றது நமது பாக்கியமே திரைமறைவில் இருந்து இதனைக் கேட்ட புருடோத்தமன், 'ஐயோ! கஷ்டம்! இவ்வரசன் களங்க மில்லாதவன் ! குடிலனின் துரோகத்தை யறியாதவன்!”என்று தனக்குள் கூறிக்கொள்கிறான்.) அவருடைய மகன் பலதேவன் வீரம், அறிவு, ஆற்றல், ஊக்கம் முதலியவற்றில் சிறந்து விளங்குகிறதை எல்லோரும் அறிவீர்கள். நமக்கு நேர்ந்திருக்கிற போர் நெருக்கடியைக் கருதியும், குடிலருடைய குடும்பத்துக்கு நாம் கடமைப் பட்டிருப்பது கருதியும் நமது இளவரசியை பலதேவருக்குத் திருமணம் செய்விக்க இசைந்துள்ளளோம். திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் முனிவர் ஆசிரமத்திற் சென்று தங்குவார்கள். அதற்காகவே அடிகள் இங்கிருந்து சுரங்கவழி யொன்றை அமைத்துள்ளார். இளவரசி மனோன்மணியைப் பற்றிய கவலை தீர்ந்த பிறகு, நாளைக் காலை