68
மொழிநூற் கட்டுரைகள்
முப்பத்திரண்டாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. இவ்வுத்தியை யுக்தி எனத் திரித்தாள்வர் வடநூலார்.
இரு கட்சியர் விளையாடும் எல்லா விளையாட்டுகளிலும் கட்சி யமைத்தற்கு இவ்விருவராய்ப் பொருந்தி வருவது உத்தி கட்டுதல் என்பர். கட்டுதல் என்னும் சொல் வழக்கே உத்தியென்னும் சொற்குப் பொருத்த பொருளுண்மையை உணர்த்தப் போதிய சான்றாகும். கட்டுதல் பொருத்துதல், கள்ளுதல், பொருந்துதல் கள்ள என்பது பொருந்த என்று பொருள்படும் ஓர் உவம உருபு "கள்ளக் கடுப்ப ஆங்கவை எணுசு” என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க. (1232) 'கள்' என்னும் பகுதியினின்று பிறந்ததே களம் (கூட்டம், அவை) என்னும் தொகுதிப் பெயரும் கட்சி (கள் + சி) என்னும் பெயரும் இப்பகுதியதே.
சென்னைப் பல்கலைக் கழக அகராதி விளையாட்டு - த்திச் சொல்லைத் தெலுங்குச் சொல்லென்று பிறழக் கொண்டதோடு, நூலுத்திச் சொல்லினின்று வேறுபட்ட தெனவுங் கூறியுள்ளது. உத்தி யென்பதனொடு தொடர்புற்ற உந்து என்னும் சொல் பொருந்துதற் பொருள்படுவது கவனிக்கத் தக்கது.
"தானந் தோறும் உந்திடுங்கரணம்” என்பது சிவஞான சித்தியார். (4, 34) தமிழில் ஏறத்தாழ முக்காற் பகுதி உகரவடிவச் சொற்கள். உகரவடி சொல்லாக்கத்தில்
(1) முன்னைத் திரிபு (2) அள்ளைத் திரிபு
(3) பின்னைத் திரிபு
என மூவகைத் திரிபடையும் உகரம் ஊகார ஒகர ஓகாரங்களுள் ஒன்றாவது முன்னைத் திரிபு; உகரம் அகரமாவது அள்ளைத் திரிபு; உகரம் இகரமாவது பின்னைத் திரிபு; முன்னைத் திரிபு என்றும் மோனையாகவே யிருக்கும்.
எ-கா :
புழை
பூழை
குட்டு
கொட்டு
முன்னைத் திரிபு
முடங்கு
மடங்கு
அள்ளைத் திரிபு
புரள்
பிறழ்
பின்னைத் திரிபு
இவற்றுள் பின்னிரண்டும் மோனையாகவும் தொடரும் அன்று, அள்ளை, மோனை, பின்னை மோனை எனப்படும்.
எ-கா : குளியம்
கோள்
பசும்ை
பைம்மை
கூளி, கொள்
முன்னை மோனை பாசி
அள்ளை மோனை