உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவலர் பாரதியார் நற்றமிழ்த் தொண்டு

7

"இதன் பொருள்: அரி, அயன், அரன் என்னும் மூவர் கொடியுள்ளும் ஒன்றோ டுவமித்துப் பலரும் பொருந்துதல் வரும் வேந்தனுடைய கொடியைப் புகழ்ந்தது."

கந்தழி

சூழு நேமியான் சோவெறிந்த

வீழாச்சீர் விறன்மிகுத் தன்று,”

இ-ள்: வளைந்த சக்கரப்படையையுடைய கண்ணன், வாணாசுரனது சோ என்னும் மதிலரணை அழித்த கெடாத தன்மையையுடைய வெற்றியைச் சிறப்பித்தது.

வள்ளி

பூண்முலையார் மனமுருக

வேன்முருகற்கு வெறியாடின்று."

இ-ள்: அணிகலத்தாற் சிறந்த மார்பையுடைய பெண்டிர்மனம்நெகிழ வேலினையுடைய முருகனுக்கு வெறியென்னுங் கூத்தை ஆடியது.

இனி, நச்சினார்க்கினியர் மேற்கூறிய நூற்பாவிற்கு உரைத்த கண்ணழித்துரை வருமாறு:

"கொடிநிலை கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் வெஞ்சுடர் மண்டிலம் (கதிரவன்); கந்தழி - ஒரு பற்றுக்கோடின்றி அருவாகித் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள்; வள்ளி - தண்கதிர் மண்டிலம் (திங்கள்); என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் - என்று சொல்லப்பட்ட குற்றந் தீர்ந்த சிறப்பினையுடைய முற்கூறப்பட்ட மூன்று தெய்வமும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே முற்கூறிய அமரரோடே கருதுமாற்றால் தோன்றும்.”

-

இனித் தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, ஆசிரியர் மு. இராகவையங்கார் அவர்களின் தனி விளக்கம் வருமாறு:

£

இச் சூத்திரத்திற்கு என் கருத்திற்றோன்றிய சில கருத்தையும் அறிஞர் ஈண்டே ஆராய்ந்துகொள்ளக்கடவர். அஃதாவது தெய்வப் புலமைத் திருவள்ளுவர், தம் பெருநூற்றொடக்கத்தே கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை அறன் வலியுறுத்தல் என்ற நான்கதிகாரங் களைப் பாயிரமாகத் தனியே நிறுத்திக் கூறுகின்றாரன்றோ? “ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும் பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின்” என்று சங்கப் புலவர் ஒருவர் இவற்றை வேறு பிரித்துக் கூறுதலுங் காண்க. இங்ஙனம் இந் நான்கதிகாரங்களைமட்டும் பாயிரமாக வள்ளுவர் தனியே கொண்டது எக்காரணம் பற்றி? என்ற கேள்வி நெடுக நிகழ்ந்து வருவது உண்டு, இதற்குத் தக்க விடை இதுகாறும் பெறப்பட்டதாகத் தெரிந்திலோம். ஆயின் தொல்காப்பியனார் கூறிய “கொடிநிலை கந்தழி” என்ற இச் சூத்திரம்