உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் தமிழ்த்தொண்டு இயன்றது எங்ஙனம்?

31

அனுப்பச் சொன்ன டங்கட்கெல்லாம் தப்பாது அனுப்புவித்தும் வேண்டும்போதெல்லாம் வேண்டிய அளவு கடன் தந்துதவியும், பல்வேறு வகையிற் செய்துவந்த உதவியும் வேளாண்மையும் முற்றச் சொல்லுந் திறத்தவல்ல.

அவற்றுட் சிறப்பாக, அண்மையில் வெளிவந்த திருக்குறள் தமிழ் மரபுரைக்கு அவர்கள் திருத்தம், அச்சீடு, கட்டடம், விடுக்கை, கடன் கொடுப்பு ஆகிய ஐவகையிற் செய்த அரும்பேருதவிக்குத் தமிழுல கனைத்தும் என்றும் கடப்பாடுடையதாகும். தங்கள் பல்துறைப் பணிகட் கிடையே இறுதிப் பதின் படிவங்களையும் மெய்ப்புத் திருத்தியதுடன், ஈற்றிரு படிவங்களைத் தங்கள் சொந்தப் பணியாள்களைக் கொண்டும் அடுக்குவித்து, ஒரு கிழமை வினையை ஒருநாளுக்குள் முடித்துப் பறம்புக் குடி உலகத் தமிழ்க்கழகத் திருவள்ளுவர் ஈராயிர ஆண்டு விழாவிற்கு நூறு படிகள் விடுத்துதவியது ஓரளவு இறும்பூதுச் செயலேயாகும். சுருங்கச் சொல்லின், 1968ஆம் ஆண்டு, நவம்பர்த் திங்கள் முதற் பக்கல் பாரி அச்சகத்தில் அச்சிடக் கொடுத்த என் திருக்குறள் தமிழ் மரபுரை 1969 திசம்பர் 24ஆம் பக்கல் வெளிவரச் செய்தவர்கள் திரு. வ. சுப்பையாப் பிள்ளை அவர்களே. அவர்கள் தலையிட்டிராவிடின், அவ் வுரை குறைந்த பக்கம் ஆறு மாதம் பொறுத்தே வெளிவந்திருக்கும். அதனால், எனக்குப் பெரும் பொருளிழப்பும் நேர்ந்திருக்கும்.

இனி, அண்மையில் நான் என் வலக்கண் படல அறுவை செய்து கொண்டபோது, இருகிழமை படுக்கையும் உணவும் மருந்தும் விடுத்தும் ஊர்தியனுப்பியும் உதவியதை ஒருபோதும் மறவேன். என் நூல் வெளியீட்டிற்கு என் உடல் நலமும் இன்றியமையாததாதலின், இதையும் இங்கே கூற வேண்டியதாயிற்று.

இங்ஙனம் பலவகையிலும் என் தமிழ்த்தொண்டை இயல்வித்து, மும்மொழிப் புலமை செம்மையிற் பெற்ற நிறைபுல முடியாம் மறைமலை யடிகளும் என்னை உளமுவந்து பாராட்டுமாறு செய்த திரு. வ. சுப்பையாப் பிள்ளை அவர்கட்கு நான் செய்யக்கூடிய கைம்மாறு, உலகத் தமிழ்க்கழக உறுப்பினரையும் ஏனைத் தமிழன்பரையும், என்றும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடுகளையே வாங்கியும் வாங்குவித்தும், அவர்கள் வெளியீட்டுக் கலை வெற்றியை வியந்தும் நயந்தும், இன்னும் கழி பல்லாண்டு கட்டுடம்புடன் வாழ்ந்து அவர்கள் தங்கள் செந்தமிழ்த் தொண்டைத் தொடர்ந்து செய்யுமாறு ஊக்கிவர வேண்டுமென்று. ஆர்வத்துடன் வேண்டிக்கொள்வதேயன்றி வேறன்று.

சைவசித் தாந்தநூல் சார்பதிப்ப கம்வாழி

தெய்வத் திருவள் ளுவம்வாழி

-

செய்வெற்றச்

சுப்பையா வாழி சொரிமுகில் நீடூழி

தப்பாது வாழி தமிழ்.

"செந்தமிழ்ச் செல்வி" சனவரி 1970

செய்

செயல். வெற்றம் - வெற்றி.