உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

பாவாணர் நோக்கில் பெருமக்கள்

Tell me the company you keep, and I will tell you what you are. Tell me your friend and I will tell you your character.

Tell me with whom thou goest and I will tell thee what thou doest.

He that walketh with the virtuous is one of them.

Keep good company and you shall be of the number.

அறிவும் நற்குணங்களும் நிறைந்தவனே சான்றோன். சாலுதல் நிறைதல். சால்வது சால்பு. சால்புடையோன் அல்லது சான்றவன் சான்றோன். குணநலம் சான்றோர் நலனே”,

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு) ஐந்துசால் பூன்றிய தூண்

என்றார் திருவள்ளுவர்.

JJ

ஈன்றுபுறந் தருதல் என்றலைக் கடனே

சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே”

என்று ஒரு மறக்குலத் தாய் கூற்றாகப் பொன்முடியார் பாடியுள்ளார்.

Ce

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல்",

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்",

(982)

(983)

(புறம். 312)

(67)

(69)

மகன்றந்தைக் காற்றும் உதவி யிவன்றந்தை

யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்”

(70)

என்றதனால், ஆறறிவு படைத்து உயர்திணை யென்று உயர்த்திச் சொல்லப்படும் மக்களினத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் சான்றோனாதல் வேண்டுமென்பதே, திருவள்ளுவர் நோக்கமாம்.

6. இல்லறத்தை நல்லறமாக்கியவர்

மேனாட்டுக் கிறித்தவக் குரவர் இரண்டொருவர் மட்டுமன்றி, தமிழ்நாட்டுத் துறவியார் ஒருவரும், திருக்குறட் காமத்துப்பால் என்னும் இன்பத்துப்பாலைப் பிறழவுணர்ந்து, திருக்குறள் துறவியர் கற்கத் தகுந்த நூலன்று என்று புறக்கணித்துள்ளனர்.

இனி,

"நோய்கொண்டா லுங்கொளலாம் நூறுவய தாமளவும்

பேய்கொண்டா லுங்கொளலாம் பெண்கொள்ள லாகாதே”