உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

93

அரசன் : (தனக்குள்) இவளது சினம் கரவடம் இல்லாத தாய்த் தோன்றுதலால், இஃது என் மனத்தில் ஐயத்தை உண்டு பண்ணுகின்றது.

மறைவிற் செறிந்த காதற் பெருங்கிழமை மனக்கொளாது

குறையும் நினைவாற் கொடுமனம் வல்லென்ற எனைக்குறித்துப் பிறைபோற் புருவம் முரியப் பெருவிழிகள் சிவக்கச்சினம் முறையே மிகுதல் மதன்வில் லிரண்டாய் முறித்திட்டதே.

(உரக்க) நன்மாதராய்! துஷியந்தனுடைய செய்கை யாண்டும் அறியப்பட்டுள்ளது; ன்னும் இதனை யான்

நினைவுகூரக்கூடவில்லையே.

க சகுந்தலை

புருவமிசந்திற்

பிறந்தவரென்கின்ற நம்பிக்கையால் யான் நாவில் தேனும் அகத்தில் நஞ்சும் வைத்திருக்கின்ற இவர் கைக்கு எளிதாக அகப்பட்டதுபற்றி யான் வேசியாக்கப்பட்டது தக்கதேதான்! (முன்றானை ஓரத்தால் முகத்தை மூடிக்கொண்டு அழுகின்றாள்.)

சார்ங்கரவன் : தானாகவே பதைத்துச் செய்த ஒரு செய்கையானது இப்படித்தான் துயரத்தைத் தரும்; ஆதலால், மறைந்த சேர்க்கையானது நன்கு ஆராய்ந்தறிந்த பின்னரேதான் செயற்பாலது. மனவியற்கை நன்கு தேறப் படாதாரொடு கொண்ட நட்புப் பகையாய் முடிகின்றது.

அரசன் : ஐய! இம் மாதரிடத்தில் வைத்த நம்பிகைக் யினாலேயே குற்றமுள்ள சொற்களைச் சொல்லி எம்மை நீர் ஏன் புண்படுத்துகின்றீர்?

சார்ங்கரவன் : (ஏளனமாய்) ஒன்றுக்கொன்று கீழது மேலதான செய்தியைக் கேட்டுவிட்டீர். பிறந்தது முதல் கள்ளமின்னதென்றே கற்பிக்கப்படாத ஒருவருடைய சொல் பொய்தான்: பகைவரை ஏமாற்றுதலையே ஒரு கல்வியாகக் கற்கின்றவர்கள் உண்மை பேசுதற்குத் தகுதியானவர்கள் தாம்!

அரசன் : உண்மை பேசுகின்ற ஐயா! அது நம்மால் ஒப்புக் காண்டதாகவே யிருக்கட்டும். ஆனால், இந்த அம்மையை ஏமாற்றுதலால் நமக்கு வரும் ஊதியம் என்னை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/124&oldid=1577183" இலிருந்து மீள்விக்கப்பட்டது