உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

ஸ்தானங்களுக்குக் கொண்டு போவதற்குப் பிந்து என்னுமோர் குறியை அவைகளோடு கூட்டி, அது மூலமாய் ஏகம் தசமுதலான ஸ்தானங் களை முறையே யேற்படுத்தியிருக்கையால், வேண்டிய எண்களை ஏகதசஸ்தானக் கிரமப்படி யெழுதிக் கூட்டல் கழித்தல் முதலான கணிதக் கிரியை செய்வதற் கெளிதா யிருக்கிறது.

'இத் தமிழ்க்கோ வென்றால் மேற்கூறிய புள்ளிவடிவுக் கீடாக தச சத சகசிர மென்று மூன்று ஸ்தானங்களுக்கும்? என்னு மிம் மூன்று குறிகளு மேற்படுத்தி மற்றை ஸ்தானங்களுக்கும் அப்படியே வெவ் வேறு குறிகளேற்பாடு செய்யாம விக்குறிகளைக் கொண்டுஞ் சொற்களைக் கொண்டும் வழங்குகிறதினால், எண்களுக்கு ஏக தச ஸ்தான முதலிய முறையா லியல்பாயுண்டான வலி குறைதலுங் கணிதக் கிரியைகளுக் கொவ்வாமையு நேரிட்டது.

"மற்றுமிக்காலத்து வழங்கு மெண்சுவடியுங் கணிதமுமாகிய நூல்களுள் வடநூற் கணிதம் போல முழுவதுஞ் சொல்லாமையுஞ் சில சொல்லியிருப்பனவுங் கற்போர்க் கெளிதுணரக் கூடாமையு மென்னு மிந்நால்வகைப் பெருங் குறைவாகிய மாசொழிப்பாயென்று.

“கல்விப் பயிற்சியின்மையின் களை மூடிக்கிடந்த இத்தேசத் தார் அறிவென்னும் பயிரை அக்களை களைந்து வளர்ந்தோங் குவிக்க வேண்டுமென்னும் அருட்கருத்தினால், சென்ன புரியில் பொற்பூவின் மணமிருப்பது போலுஞ் செல்வத்தோடுங் கல்வியிற் சிறந்த வுபகார சிந்தையுள்ள துரைகளேற்பாடு செய்த பள்ளிக்கூடப் புத்தக சங்கத்தாரிற் கணித நூற் கரைகண்டவராகிய மேசர் டி. அவிலாண்டு துரையும், தமிழ் முழுதுணர்ந்த கிளார்க்குத் துரையுமாகிய இவ்விருவரு மனமுவந் தேவ, அப்படியே அந்நால் வகைப்பட்ட குறைவு நீங்கும் பொருட்டு இக் கணித தீபிகை யென்னு நூல் செய்யப்பட்டது.

66

"இதிலேற்படுத்தியிருக்கிற கிரமங்களென்ன வென்றால், இப்போது வழங்குகிற ஒன்று முத லொன்பது வரையு மிருக்கின்ற எண்களையே வைத்துக் கொண்டு, ஸ்தான சங்கேதங்களுக்கு என்னுமிக் குறிகளொவ்வாமையா லிவைகளைப் பழையன கழிதலாக நீக்கி அவைகளுக்கீடாகப் புதியன புகுதலாகப் பிந்து முதலிய பெயர்பெற்ற 0 இக்குறி மேற்கொள்ளப்பட்டது. இப் புள்ளியினால்