உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

சைவ வைணவ சமண பௌத்த சமயங்களுக்கு எல்லாம் பொதுவான சிறு தெய்வம் இந்திரன். ஆனால், இந்திரன் உருவத்தைச் சிற்ப உருவமாக அமைக்கும் போது, சிவனுக்கும் திருமாலுக்கும் கீழ்ப்பட்டவன் இந்திரன் என்பதைக் காட்ட அவனுக்கு இரண்டு கைகளை அமைத்துக் காட்டுகிறார்கள் சைவ வைணவ சமயத்தார்கள். இதற்கு மாறாகப், புத்தருக்கும் ஜினனுக்கும் கீழ்ப்பட்டவன் இந்திரன் என்பதைக் காட்டுவதற்காகப் பௌத்தரும் சமணரும் இந்திரனுக்கு நான்கு கைகள் அமைத்துக் காட்டுகிறார்கள்.

திருமால் சிவபெருமான் திருவுருவங்களுக்கு இரண்டு கைகளை அமைக்காமல் ஏன் நான்கு அல்லது எட்டுக் கைகளை அமைக்கிறார்கள்? ஜினனுக்கும் புத்தனுக்கும் நான்கு கைகள் அமைக்காமல் ஏன் இரண்டு கைகளை மட்டும் அமைக்கிறார்கள்? இதற்குக் காரணம் என்ன? இந்தச் சமயங்களின் கொள்கைகளே, தத்துவங்களே இதற்குக் காரணமாகும். அப்படியானால் அந்தத் தத்துவங்கள் எவை? அவற்றை விளக்குவோம்.

சைவர் வணங்கும் சிவபெருமானும் வைணவர் வணங்கும் திருமாலும் உருவம் இல்லாத கடவுள்கள். உருவம் இல்லாத இந்தக் கடவுளர்க்கு, உருவத்தைக் கற்பித்தார்கள். எல்லாப் பிறப்புக்களிலும் மனிதப்பிறப்பே பலவகையிலும் சிறந்து காணப்படுகிறபடியால், கடவுளுக்கு உருவத்தைக் கற்பனை செய்தபோது, அவருக்கு மனித உடம்பையே கற்பித்தார்கள். மனித உடம்பைக் கற்பித்தபோதிலும் கடவுள் ஆகாயத்தையே உடலாகக் கொண்டவர் என்றும், திசைகளையே கைகளாக உடையவர் என்றும் கற்பனை செய்தார்கள். இதற்குச் சைவ வைணவ நூல்களே சான்று கூறுகின்றன.

சிவபெருமானுக்கு உடம்பாக இருப்பது ஆகாசம் என்று சைவ நூல்கள் கூறுகின்றன. ஆகாசமாம் உடல் என்று திருமந்திரம் கூறுகிறது. விசும்பே உடம்பு என்று சேரமான் பெருமாள் பொன்வண்ணத்தந்தாதியில் (19) கூறுகிறார்.

66

'விண்ணவர் முதலா வேறோர் இடமாக்

கொண்டுறை விசும்பே, கோல! நின்ஆகம்

தமது

என்று பட்டினத்துப் பிள்ளையார் தமது ஒருபா ஒருபஃதில் கூறுகிறார். திசைகள் எட்டும் திருக்கைகள் என்று திருமந்திரம்