உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

காபாலி:

தேவ:

காபாலி:

தேவ:

காபாலி:

43

சாந்தி! சாந்தி! ஐம்புலன்களை அடக்கி, பிரமசரிய விரதங் காத்து, தலைமயிரைப் பிடுங்கி எடுத்து, அழுக்கடைந்த உடம்பில் அழுக்குக் கந்தைகளை உடுத்து, உண்பதற்குத் தனியாக ஒரு நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு உயிரை வாட்டித் துன்புறுத்துகிற அவர்கள் பெயரை நிந்தனையாகச் சொல்லுவதும் மகாபாபம். அப்பாஷண்டிகளின் பெயரைக் கூறிய என்னுடைய நாக்கு குற்றப்பட்டுவிட்டது. ஆகையால், கள்ளினால் கழுவிச் சுத்தப்படுத்தவேண்டும். அப்படியானால், இன்னொரு கள்ளுக்கடைக்குப் போகலாம்; வாரும்.

அப்படியே செய்வோம். வா, போகலாம். (போகிறார் கள்.) ஆகா! காஞ்சிமா நகரத்தின் அழகே அழகு. கோயில் கோபுரங்களின் மேல் படிந்துள்ள மேகங் களினால் உண்டாகும் இடிமுழக்கம், முரசுகள் ஒலிக்கிற முழக்கத்தோடு மாறுபட்டொலிக்கிறது! மாலைகளும் பூச் செண்டுகளும் நிறைந்த பூக் கடைகள் இளவேனிற் காலத்தைக் காட்டுவது போல் இருக்கின்றன! மங்கையரின் சிலம்பொலி காம தேவனுடைய வெற்றி முழக்கத்தின் ஆரவாரம் போல் இருக்கிறது!

ஐயா! காஞ்சிமாநகரம் வாருணி தேவியைப் போல இனிமையாகக் காணப்படுகிறது!

ஆமாம்! ஆமாம்! அதோ, அந்தக் கள்ளுக்கடையைப் பார்! அது யாகசாலையைப்போன்று எவ்வளவு அழகாகக் காணப்படுகிறது! கடையின் பெயரைத் தாங்கி நிற்கும் கம்பம், யாகசாலையில் உள்ள யூபஸ்தம்பம் போல் காணப்படுகிறது. மதுபானம் சோமபானம் போலக் காணப்படுகிறது. கள்குடிப்போர், யாகசாலையில் உள்ள பிராமணர் போலக் காணப் படுகிறார்கள். கள் கலயங்கள், சோமபானத்தை வைக்கும் பாத்திரங்கள் போல் இருக்கின்றன. அங்கு விற்கப்படும் சுவையுள்ள மச்சமாமிசங்கள், யாகத்தில்