உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

367

தழுவி, “மாணிக்கவாசகர் காலமும் ஆராய்ச்சியும்” என்னும் நூலை எழுதியிருக்கிறார். இதில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் இருந்தார் என்று கூறுகிறார். கே. ஜி. சேஷ அய்யர் : The Christian College Magazine, September 1901. டாக்டர் போப் ஐயர் அவர்கள், தாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருவாசக நூலின் முகவுரையில், மாணிக்கவாசகர் கி.பி. 7-ஆம் 8-ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கூறுகிறார். சென்னை நீதிமன்றத்து நீதி பதியாயிருந்த திரு. இன்னஸ், மாணிக்கவாசகர் சங்கரரைப் பின்பற்றியவர் என்றும், ஆகவே அவர் -ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகிறார். Mr. Innes: The Indian Magazine and Review, Dec. 1900. The Imperial and Asiatic Quarterly Review, April 1902. Prof. Julien Vinson: Malabar Quarterly Review Vol. VII, p. 112, Rev. Mr. Goudie: The Christian College Magazine, August 1902. Mr. Nelson : Madura Manual Vol. I, p.53. கி.பி. 819-இல் மாணிக்கவாசகர் இருந்தார் என்கிறார். கோபிநாத ராயர், கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 11-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்ததாகக் கூறுகிறார்: The Christian College Magazine, June 1905. சி.வி. நாராயண அய்யர் கூன்பாண்டியன் காலம் என்கிறார். O.E.H.S.S.I. Chapter XII. சீனிவாசபிள்ளைஅவர்கள் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு என்பர்: "தமிழ் இலக்கிய வரலாறு." திரு.வி. வெங்கையா அவர்கள் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு என்பர். Ambasamudram Inscription of Varaguna Pandya Ei. Ind Vol. IX. 89.

சுந்தரர் கால ஆராய்ச்சி

நாராயண அய்யர் தாம் எழுதிய தென் இந்திய சைவ சமயத்தின் தோற்றமும் வரலாறும் என்னும் ஆங்கில நூலிலே' சுந்தரர் கி.பி. 710 முதல் 735 வரையில் வாழ்ந்திருந்தார் என்று கூறுகிறார். இவர் கூற்று ஏற்கத்தக்கதன்று. ஏனென்றால், சுந்தரர் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்பது சரித்திர ஆசிரியர்கள் கண்ட முடிபு. அந்த முடிபுக்கு மாறாக இவர் கி.பி. 8-ஆம் நூற்றாணடின் முற்பகுதியில் இருந்தவர் என்று கூறுவது கொள்ளத் தக்கதன்று.

மு. இராகவையங்கார் அவர்கள், இரண்டாம் நரசிம்மவர்மனான இராஜ சிம்மன் காலத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் இருந்ததாகக் கூறுகிறார். அன்றியும், திருமங்கை யாழ்வாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் ஒரே காலத்தில் இருந்த வர்கள் என்றும் கூறுகிறார். மேலும், 1. Origin and early History of Saivism in South India C.V. Narayana Ayyar.