உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

(சிற்றெண்)

173

போர் அரக்கர் ஓர்ஐவர்க் கறவமிழ்தம் பொழிந்தனையே! ஆர் அமிழ்தம் மணிநாகர் குலம் உய்ய அருளினையே! வார்சிறைப்புள் அரையர்க்கும் வாய்மைநெறி பகர்ந்தனையே! பார்மிசை ஈரைந்தும் பாவின்றிப் பயிற்றினையே!

(இடையெண்)

அருளாழி நயந்தோய் நீஇ!

அறவாழி பயந்தோய் நீஇ!

மருளாழி துறந்தோய் நீஇ!

மறையாழி புரந்தோய் நீஇ! மாதவரில் மாதவன் நீஇ! வானவருள் வானவன் நீஇ!

போதனரிற் போதனன் நீஇ! புண்ணியருட் புண்ணியன் நீஇ!

ஆதி நீஇ! அமலன் நீஇ!

(அளவெண்)

அயனும் நீஇ! அரியும் நீஇ!

சோதி நீஇ! நாதன் நீஇ!

துறைவன் நீஇ! இறைவன் நீஇ!

அருளும் நீஇ! பொருளும் நீஇ!

அறிவன் நீஇ! அநகன் நீஇ!

தெருளும் நீஇ! திருவும் நீஇ!

செறிவும் நீஇ! செம்மல் நீஇ!

எனவாங்கு,

(தனிச்சொல்)

(சுரிதகம்)

பவளச் செழுஞ்சுடர் மரகதப் பாசடைப்

பசும்பொன் மாச்சினை விசும்பசும் புதைக்கும்

போதியந் திருநிழற் புனித! நிற் பரவுதும்

மேதகு நந்தி புரிமன்னர் சுந்தரச்