உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

அதனை

காட்டுவோம்:

66

இப்போதைய தமிழ்

எழுத்தினால்

217

எழுதிக்

‘ஸ்ரீ தொண் டையந்தார் வேந்தன் நரேந்திரப் போத்தரையன், வெண்பேட்டின் றென்பால் மிகமகிழ்ந்து - கண்டான்

சரமிக்க வெஞ்சிலையான் சத்துருமல் லேஸ்வராலயமென் றானுக் கிடமாக வாங்கு.

இவ்வூர் ப்ரம்மங்கலவன் செல்லன் சிவதாசன் சொல்லியது.”

மண்டபத்தின் வெளிப்புறத் தூண்களில் இடது பக்கத்துத் தூண் ஒன்றிலே பல்லவக் கிரந்த எழுத்தினால் எழுதப்பட்ட வடமொழிச் செய்யுள் காணப்படுகிறது.

அதன் வாசகம் இது:

66

‘தண்டாநத நரேந்த்ரேண நரேந்த்ரனைஷ காரித:

ஸத்ருமல்லேண ஸைலேஸ்மின்

ஸத்ருமல்லேஸ்வ ராலய:

இதன் கருத்து இது:-

66

தனது போர்வீரர்களால் பகைவரை அடக்கிய நரேந்திரனாகிய சத்துருமல்லன் என்னும் அரசனாலே, இந்த மலையின் மேலே சத்துரு மல்லேஸ்வராலயம் என்னும் கோயில் அமைக்கப்பட்டது.”

6. மகேந்திரவாடி குகைக்கோயில்

மகேந்திரவாடி, வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜா பேட்டை தாலுகா சோளிங்கூர் இரயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே மூன்று மைலில் இருக்கிறது.

மகேந்திரவாடி என்பது மகேந்திரபாடி என்பதன் மரூஉ. முதல் மகேந்திரவர்மன் காலத்தில் உண்டாக்கப்பட்டது இந்த ஊர் என்பது இதன் பெயரினாலே அறியலாம்.

இவ்வூருக்கு அருகில் ஒர் ஏரியுண்டு. ஏரிக்கு அருகிலே பழைய காலத்திலே கோட்டை இருந்த அடையாளங்கள் தரையில் காணப்படுகின்றன. இங்குள்ள ஒரு பெரிய பாறையில் குகைக் கோயில்