உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

125

வாராத பூரணையினிற் பராக்கிரம மாற .

கயிலாயந்தான் .

கண்டனனே.

கோதற்ற பத்தி யறுபத்து மூவர்தங் கூட்டத்திலோ

தீதற்ற வெள்ளிச் சிலம்பகத்தோ செம்பொன் னம்பலத்தோ வேதத்திலோ சிவ லோகத்திலோ விசுவ நாதனிரு பாதத்திலோ சென்று புக்கான் பராக்கிரம பாண்டியனே.

ஓங்குநிலை யொன்ப துற்றதிருக் கோபுரமும் பாங்கு பதினொன்று பயில்தூணுந் - தேங்குபுகழ் மன்னர் பெருமான் வழுதிகண்ட தென்காசி தன்னிலன்றி யுண்டோ தலத்து.

அணிகொண்ட வந்த வணங்குமொன் றேயடி யேற்குனக்கு மணிகொண்ட வாசல் மணியும்ஒன் றேபகை மன்னரையும் பிணிகொண்ட காரையு முந்நீரை யும்பெரும் பூதத்தையும் பணிகொண்ட செண்பகத் தென்னா பராக்கிரம பாண்டியனே.

11

12

13.

குறிப்பு :- செய்யுள் 1. சகாத்தம் - சாலிவாகன சகாப்தம். சகாத்தம் 1368 என்பது கி.பி. 1446-ஆம் ஆண்டு. செய்யுள் 2. கலியுகம் 4558 என்பது சக ஆண்டு 1379 ஆகும் ; கி.பி. 1457-ஆம் ஆண்டு. உபானம் என்பது கோவில் கட்டடத்தின் அடிப்பகுதிக்குப் பெயர். செய்யுள் 12. சகாத்தம் முந்நூற்றுடன் ஆயிரத்தெண்பத்தைந்து என்பது 1385. இது கி.பி. 1463-ஆம் ஆண்டு. முதலாவது செய்யுளுக்குக் கீழே “அடைவு திகழ் சகாத்த மாயிரத்து முந்நூற்றறுபத் தொன்பதின் மேற்செல்” என்று தொடங்கும் செய்யுள் சிதைந்து அழிந்துவிட்டது. ஆதலின் அச்செய்யுள் இங்கு எழுதப்பட வில்லை.

அய்யனம்பி

இடம் : கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி கிராமத்துக்கு அருகில் உள்ள குகாநாத சுவாமி கோவிலில் உள்ள கல் வெட்டெழுத்து.

பதிப்பு : திருவாங்கூர், சாசனங்கள், பக்கம் 169. (T. A. S.Page.169)