உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

15

20

25

30

35

என்னையும் எடுத்தெறிந் தேகுதல்? சிச்சீ! மன்னவர்க் காக மாள்வ திவர்கடன்,

மன்னவன் என்போன் மதியில் வலியோன், அன்றியும் பலநா ளாகநம் அன்னம் தின்றிங் கிருந்திவர் செய்ததேன்? அவர்தம் உடன்பா டிதுவே. கடம்பா டாற்றும்

காலம் விடுவதார்? மேலும் இயல்பாப்

பலபெயர் துக்கப் பட்டால் அன்றி

உலகில் எவரே ஒருசுகம் அணைவார்?

இயல்பிது வாயின் இரங்கல் என்பயன்?

வயலுழும் உழவோர் வருத்தமும் குனிந்திருந்து ஆடை நெய்வோர் பீடையும் வாகனம் தாங்குவோர் தமக்குள தீங்கும் நோக்கி உலகிடை வாழா தோடுவ ரோபிறர்?

அலகிலா மானிடர் யாவரும் அவரவர் நலமே யாண்டும் நாடுவர், மதிவலோர் களத்தொடு காலமும் கண்டுமீன் உண்ணக் குளக்கரை இருக்கும் கொக்கென அடங்கிச் சம்பவம் சங்கதி என்பவை நோக்கி

இருப்பர்; நலம்வரிற் பொருக்கெனக் கொள்வர் நண்ணார் இதுபோல் நலமிலா ஐயம் எண்ணார் துணிந்தபின் பண்ணார் தாமதம். ஏழையர் அலரோ இரங்குவர் இங்ஙனம்? கோழையர்! எங்ஙனம் கூடுவார் இன்பம்? வந்தனன் அஃதோ மன்னனும்.

233

(ஜீவகன் வர)

கடம்பாடு - கடமை. வீரருடைய கடமை, செஞ்சோற்றுக் கடன் கழிப்பது. பீடை - துன்பம். வாகனம் - (இங்கு) பல்லக்கு, சிவிகை. அலகு இலா எண்ணிக்கை இல்லாத. களம் - இடம். 'மீன் உண்ணக் குளக்கரை இருக்கும் கொக்கென' என்பது 'கொக்கொக்கக் கூம்பும் பருவத்து; மற்றதன், குத்தொக்க சீர்த்த இடத்து' என்ற திருக்குறள் கருத்து. சம்பவம் - நிகழ்ச்சி. சங்கதி - தொடர்பு, செய்தி. 'எண்ணார் துணிந்தபின் பண்ணார் தாமதம்' என்பது, 'எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின், எண்ணுவம் என்பது இழுக்கு' என்ற திருக்குறளின் கருத்தைக் கூறுகிறது.