உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 17

உயிர்மெய் எகர ஒகரங்களில் வீரமாமுனிவர் இன்னொரு திருத்தத்தையும் உண்டாக்கியிருக்கிறார். அஃதென்ன வென்றால், பண்டைக்காலத்தில் ஒகரக் குற்றெழுத்துக்கள் மேலே புள்ளிகொடுத்து எழுதப்பட்டமை போலவே, எகர ஒகர உயிர்மெய்க் குற்றெழுத்துக்களும் மேலே புள்ளிவைத்து எழுதப்பட்டன.

எகர

(உதாரணம்: க்ெ, ப், ச்ெ (இவைகள் குற்றெழுத்து) கெ, பெ, செ புள்ளி பெறாத இவை நெட்டெழுத்து : கே, பே, சே என்று இவை வாசிக்கப்பட்டன.)

கொம்பு பெற்று வருகிற இந்த எழுத்துக்கள் குற்றெழுத்துக்கும் நெட்டெழுத்துக்கும் ஒரே மாதிரி எழுதப்பட்ட படியால், அவற்றின் வேறுபாட்டை எளிதில் தெரிந்துகொள்ளும் பொருட்டு, வீரமாமுனிவர், நெட்டெழுத்துக்குக் கொம்பை மேலே சுழித்தெழுதும் வழக்கத்தை உண்டாக்கினார். இவர் செய்த இவ்வெழுத்துச் வழுத்துச் சீர்திருத்தம் படிப்பதற்கும் எழுதுவதற்கும் தெளிவாக இருக்கிறபடியால், இவர் அமைத்த முறைப்படியே இப்போது வழங்கிவருகிறோம்.

இதைப்பற்றி வீரமாமுனிவரே, தாம் லத்தீன் பாஷையில் எழுதிய "கொடுந் தமிழ்" இலக்கணத்தின் முதல் அதிகாரத்திற் கீழ்க் கண்டவிதம் எழுதியிருக்கிறார்; அஃதாவது

66

'எகரக் குற்றெழுத்தும் ஏகார நெட்டெழுத்தும் ஒகரக் குற்றெ ழுத்தும் ஓகார நெட்டெழுத்தும் (குறில் நெடில் வேறுபாடுகளைக் காட்டும் அடையாளம் இல்லாமல்) ஒரே விதமாக எழுதப் படுவதால், அவர்கள் (தமிழர்) குற்றெழுத்து நெட்டெழுத் தென்னும் வேறு பாட்டினைப் பிரித்தறியும்பொருட்டு, நெட்டெழுத்துக்களின்மேல் புள்ளி இல்லாமலும், குற்றெழுத்துக்களின்மேல் புள்ளி வைத்து எழுதும்படி பிள்ளைகளுக்குக் கற்பிக்கிறார்கள். ஆகவே மெய் என்னும் சொல்லின்மேல் உள்ள ()ெ கொம்பின் மேல் புள்ளி வைக்காத படியால் மேய் என்று படிக்கப்படுகிறது. ஆனால், மெய் என்னும் சொல்லில் கொம்பின்மேல் புள்ளி வைத்திருக்கிறபடியால் அது மெய் என்று படிக்கப்படுகிறது. அப்படியே பொய் என்னும் சொல்லில் கொம்பு புள்ளி பெறாதபடியால் போய் என்றும், பொய் என்பது கொம்பு புள்ளி பெற்றிருக்கிறபடியால் பொய் என்றும் படிக்கப்படும். ஆனால், (சில வாக்கியங்களில் தவிர) இதனை அடையாளம் வைத்து