உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

40

சீவகன்:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

வந்தனம் வந்தனம் உன்திரு வடிக்கே

(நிலைமண்டில ஆசிரியப்பா)

குடிலா! நமது குறைவிலாப் படைகள் அடையவும் அணிவகுத் தனவோ?

அடியேன்.

குடி:

நாரணர்க் கன்றோ நீளரண் காப்பு? சொன்னதப் படியென உன்னினன்.

சீவ:

ஆமாம்!

சீவ:

45 அதற்கேன் ஐயம்?

குடி:

அவர்க்கது முற்றும்

இதக்கே டென்றனர், ஆயினும் போயினர்.

(படைகள் வணங்கி)

படைகள்:

ஜயஜய! ஜீவக வேந்த ! விஜயே!

குடி:

அதிர்கழல் வீரரும் அரசரும் ஈதோ

எதிர்பார்த் திருந்தனர் இறைவ! நின் வரவே. 50 நாற்றிசை தோறும் பாற்றினம் சுழல

நிணப்புலால் நாறிப் பணைத்தொளி பரப்பும் நெய்வழி பருதி வைவேல் ஏந்திக்

கூற்றின்நா என்னக் குருதிகொப் புளித்து மாற்றலர்ப் பருகியும் ஆற்றலா தலையும்

அடையவும் - முழுவதும். இதக்கெடு - நன்மைக் கேடானது.

பாற்று இனம் பருந்துகளின் கூட்டம்; (பாறு - பருந்து). நிணம் கொழுப்பு. புலால் - மாமிசம், இறைச்சி. பணைத்து - பருத்து. பருதி சூரியன், ஒளி. வை - கூர்மை. குருதி வ கூர்மை. குருதி - இரத்தம். மாற்றலர்

பகைவர். பருகியும் - அவர் உயிரைக் குடித்தும்