உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

223

இச்சமயம் இளவரசி புஜித்சுபோ உடல் நலிவுற்றுச் சிறிதுகாலம் அரண்மனையிலிருந்து ஒதுங்கியிருந்தாள். இதனால் சக்கரவர்த்தி அடைந்த துயரும் கவலையும் காணக் கெஞ்சியின் மனம் உருகிற்று. ஆயினும் இதனால் தனக்குக் கிடைத்த வாய்ப்பை அவனால் புறக்கணிக்க முடியவில்லை. ஒரு நாள் முழுவதும் இருந்து நினைத்து நினைத்து அவன் மனம் பெரிதும் குழப்பமுற்றது. தன் மாளிகையிலோ, அல்லது அரண் மனையிலோ எங்கிருந்தாலும் அவனால் வேறுஎதையும் நி னைக்கவோ, வேறு எவரையும் காணவோ முடியவில்லை. நாள்முழுதும் கழிந்த பின்னர் அவன் புஜித்சுபோவின் தோழி ஓமியோபுவை அணுகி, அவளுக்கு ஒரு கடிதம் கொண்டு செல்லும்படி பெரிதும் மன்றாடினான்.

அவர்களிடையே அத்தகைய தொடர்பு ஏற்படுவது தகாது என்று அந்நங்கை மதித்திருந்தாலும், கனவுலகில் திரிபவன் பார்வைபோன்ற அவன் கண்களின் தோற்றங்கண்டு அவள் அவன் மீது இரக்கங்கொண்டு இணங்கினாள். ஆனால் இளவரசியோ கெஞ்சியுடன் தான் முன்கொண்டிருந்த உறவு மிகவும் தவறானதென்று கருதியிருந்தாள். அதன் பயங்கர நினைவே அவளுக்கு ஓயாத் தொல்லையாக இருந்து வந்தது. இந்நிலையில மீண்டும் அத்தொடர்பு ஏற்படக்கூடாது என்று அவள் உறுதி கொண்டிருந்தாள்.

அவனைக் காணும் சமயம் அவள்முகம் கடுத்தும் துயர் தோய்ந்தும் இருந்தது. ஆனால் அவள் வசீகர ஆற்றலை ஒரு சிறிதும் குறைக்கவில்லை. தகுதிகடந்து தன் தோற்றத்தில் அவன் ஈடுபடுகிறான் என்று கருதிக் கடிந்து கொள்பவள்போல அவள் சிடுசிடுப்புடனும் வெறுப்புடனும் நடந்துகொண்டாள். ஆனால் அதேசமயத்தில் தன்னிடம் ஏதாவது குறைகண்டு. தன்னை வெறுப்பதன் மூலம் அவன் நினைவிலிருந்து தான் விடுதலை பெற்று அமைதிபெற முடியுமா என்று அவள் அவன் அழகிய முகத்தைத் துருவித் துருவி நோக்கினாள்.

அங்கே நடந்ததனைத்தையும் நான் இங்கே கூறத்தேவை யில்லை. அந்த இரவு மிக விரைவிலேயே ஓடிச் சென்றுவிட்டது. அவள் காதுகளில் அவன் தன் ஆர்வ அவாக்களைக் கொட்டினான். 'எப்படியோ இறுதியாகச் சந்தித்துவிட்டோம்.