உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

13


( (து-வி.) தலைவனும் தலைவியுமாகச் சுரத்திடையே தனித்துச் செல்கின்றனர். அவர்களைச் சில வழிப்போக்கர் கள் இடைவழியிற் காணுகின்றனர். அவர்களது உள்ளம் பெரிதும் கவலைகொள்ளுகின்றது. அவர்களுள் ஒருவர். தம்முடன் வந்த பிறர்க்கு இவ்வாறு இரங்கிக் கூறுகின்ற னர்.] அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து. ஒலிவல் ஈந்தின் உலவை யங்காட்டு, ஆறுசெல் மாக்கள் சென்னி எறிந்த செம்மறுத் தலைய, நெய்த்தோர் வாய, வல்லியப் பெருந்தலைக் குருளை, மாலை, மானோக்கு இண்டிவர் ஈங்கைய, சுரனே; வையெயிற்று ஐயள் மடந்தை முன்னுற்று எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம், காலொடு பட்ட மாரி ஈ 5 10 மால்வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே! ஆழ்ந்துபடக் கிடந்ததும், பெரிய குளிர்ச்சியைக் கொண்டிருந்ததுமான இக் குன்றினிடத்தே யுள்ளதும், தழைத்த வலிய ஈந்து மரங்களையுடையதும், காற்றுச் சுழன்று வீசுவதுமான தன்மையது காடு. இக் காட்டி னிடத்தே நெறிக்கொண்டு செல்லும் மாக்களது தலையை மோதியதனாலே, குருதிக்கறை படிந்து சிவந்த மாறுபட்ட தலையை உடையனவும், வாயினை இரத்தம் பூசிய உடையவுமாக விளங்குவன புலிக்குட்டிகள். பெருத்த தலையையுடைய அப் புலிக்குட்டிகள், மாலைப்பொழுதிலே, தமக்கு உணவாக மான்களை எதிர்நோக்கியபடியே புதர் களிற் பதுங்கியிருக்கும். அத்தகைய ண்டங்கொடிகள் படர்ந்தேறிய ஈங்கைப் புதர்களைக் கொண்டதும் இச் சுரத்தின் நிலைமையாகும். இதனிடத்தே. கூர்மையான பற்களையுடைய மெல்லியலாளான தன் காதலியைத் தன் முன்னே செல்லவிடுத்துத் தானும் அவள் பின்னாக இராப் பொழுதிலேயும் செல்ல நினைக்கிறானே இந்த இளைஞன்! இப்படிச் செல்லா நிற்கின்ற இளைஞனது உள்ளமானது, காற்றோடு கலந்த பெருமழை பெய்கின்ற காலத்திலே, பெரிய துறுகற்களைப் பெயர்த்துத் தள்ளும் வலிய இடி யேற்றினும் காட்டிற் கொடுமை யுடையதாகும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/14&oldid=1627136" இலிருந்து மீள்விக்கப்பட்டது