உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

நற்றிணை தெளிவுரை


நற்றிணை தெளியுரை கருத்து ‘அக் காதலர்கள், இரவுப்பொழுதில் காவலான ஓரிடத்தே தங்கிச் செல்பவராயினால் நன்று' என்பதாம். சொற்பொருள்: அழுந்துபட- ஆழ்ந்துபட, ஒலித்தல் தழைத்தல். உலவை சுழல் காற்று. 'மாக்கள்' என்றது வழிப்போக்கரை. நெய்த்தோர் - இரத்தம் வல்லியம் - புலி. ஈங்கை - ஒருவகை முட்செடி; அதன்பால் இண்டும் படர்ந் தேறப் புதர்களாக விளங்கும் என்க; இதனை இக்காலத்தார் முட்சங்கு என்பர். வை - கூர்மை. ஐயள் - மெல்வியள். மிலிர்க்கும் - பெயர்த்துத் தள்ளும். . விளக்கம் : "பகற்போதிலேயே வழிச்செல்வாரது தலையை எறிந்து, அதனாற் குருதிக்கறை படிந்த வாயோடு விளங்கிய புலிக்குட்டிகள், மீண்டும் மாலையில் தமக்கிரை யாக மான்களைக் கொன்று தின்னுதற்கு நினைந்து, அவற்றது வரவை எதிர்நோக்கிப் புதரிடையே பதுங்கியிருக் கும் சுரன்' எனச் சுரத்தின் கொடுந்தன்மையைக் கூறினார். 'அத்தகைய சுரநெறியிடத்தே, மெல்லியலாளோடு இரவின் கண் செல்லத் துணிதல் பெரிதும் கொடுமையானது' என்று நினைந்து இரங்குவார். அதனைப் பெருமழைக் காலத்தே அதிரும் இடியினுங் காட்டிற் கொடிது என்கின்றனர். இதனால், பொழுது விடிவதற்கு முன்பாகத் தன்னூர்க்குச் ன்றுவிடல் வேண்டுமென்று துணிந்த அவனது துணிவை யும், அவனது ஆண்மையையும் வியந்தனருமாம். ஆனால், அவளைக் குறித்து இரங்கி வருந்தினரும் ஆம். 3. சுடரொடு படர் பொழுது ! பாடியவர்: இளங்கீரனார். திணை : பாலை. துறை முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. [(து-வி.) முன்பொரு காலத்தே பொருள் தேடிவரத் தலைவியைப் பிரிந்து சென்று, அந்தப் பிரிவுக்காலத்தே அவளது நினைவாலுற்ற துயரத்தை அறிந்தவனாயிருந் தான் ஒரு தலைவன். அவன் மீண்டும் பொருட்பிரிவினுக்குத் தன் நெஞ்சம் தன்னைத் தூண் டியபொழுது. இவ்வாறு தன் நெஞ்சொடு கூறியவனாக வருந்துகின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/15&oldid=1627137" இலிருந்து மீள்விக்கப்பட்டது