உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

நற்றிணை தெளிவுரை


தலைவியைக் கூடி இன்புறுதற்கான செவ்விநோக்கிச் சிறைப் புறமாக நின்றபடி குறி செய்திருப்பான் என்பதாம். () உமணரது சகடம் மணலிடைக் செல்லும்போது எழுப்பும் ஓசையாற் கழனி நாரை வெருவும்' என்றது. தலைவன் வரைந்துவந்து மணந்துகொள்ளும்பொழுது எழு. கின்ற மணமுழவுகளின் ஒலியினாலே, அலருரைக்கும் அயற் பெண்டிரது வாய்கள் அடங்கும் என்றதாம். அன்றி, 'எவரைக் குறித்தோ எழுந்த அலரைத் தன்னைக் குறித்தாகவே கொண்டு தலைவி கவலையுற்று அஞ்சுவள்" என்றதும் ஆம். 5. பிரிதல் அரிதே! பாடியவர்: பெருங்குன்றூர் கிழார். திணை : குறிஞ்சி. செலவுக்குறிப்பறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது. துறை : தலைவனின் [(து-வி.) தலைவன், தோழி, தன்னைப் பிரிந்து செல்லுதற் குறிப்பாலுணர்ந்த தலைவி காவன செய்கின்றானெனக் எழில்வேறு பட்டனள். அவளைத் தெளிவிப்பாளான . அவளது அந்த வேறுபாட்டுக் குறிப்புக்களை அறிந்த தலைவன், தன் போக்கையே கைவிட்டனன் இவ்வாறு கூறுகின்றாள்.] நீலம்நீர் ஆரக் குன்றம் குழைப்ப அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர்கால் யாப்பக் குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர் நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்பப் பெரும்பெயல் பொழிந்த தொழில எழிலி தெற்கேர்பு இரங்கும் அற்சிரக் காலையும் அரிதே. காதலர்ப் பிரிதல்-இன்று செல் இளையர்த் தரூஉம் வாடையொடு மயங்கிதழ் மழைக்கண் பயந்த தூதே. என்று 10 தோழீ! இன்றைக்குச் செல்லுகின்றவரான ஏவலிளை யரையும் மீட்டுக் கொணர்ந்து தரக்கூடியதான வாடைக் காலத்தோடு மயங்கிய மழைபோல நீரைச் சொரிகின்ற நின் இமைகளையுடைய கண்கள்தாம், அவரைச் செல்லாதிருக்க வேண்டுமாறு ஒரு தூதினையும் பயந்தன. அதனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/19&oldid=1627141" இலிருந்து மீள்விக்கப்பட்டது