உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

நற்றிணை தெளிவுரை


நற்றிணை தளிவுரை விரைந்து மணந்து கொள்வதற்கான முயற்சிகளிலே ஈடுபடுத்துவதற்குத் தோழி முற்படுகின்றாள்.] முழங்குதிரை கொ ழீஇய மூரி எக்கர், நுணங்குதுகில் நுடக் கம்போலக் கணம்கொள ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப! பூவின் அன்ன ஈலம்புதிது உண்டு நீபுணர்ந் தனையேம் அன்மையின், நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி மாசில் கற்பின் மடவோள் குழவி பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு. சேணும் -எம்மொடு வந்த நாணும் விட்டேம்! அலர்கவிவ் வூரே! $10 ஆரவாரிக்கும் அலைகள் கொணர்ந்து கொழித்த பெரி தான மணல் மேடானது, நுணங்குந்துகிலினது நுடக்கத்தைப் போல மிகுதிப்பட்டுத் தோன்றுமாறு, ஊதைக்காற்றானது அதனை எடுத்துத் தூற்றாநிற்கும் நீர்வளமிக்க வலிய கடற் கரைப் பகுதிக்குத் தலைவனே! தாமரை மலரைப்போலும் எம் தலைவியினது புதுநலத்தை உண்டு, நின்னாற் கூடி இன்புறப்பட்டேமாக, யாமும் இல்லாதேம். அங்ஙனமாக ல்லாமையினாலேயே, நினக்கு உடம்படுதலையுடைய தான எம் நெஞ்சமானது தாங்கும் அளவுக்குத் துயரைத் தாங்கினேம். குற்றமற்ற கற்பினையுடைய ளையாள் ஒருத்தி தன் குழந்தையைப் பேயானது வலிந்து எடுத்துக் கொள்ள, அதனை மீட்டற்கு இயலாளாய்க் கைவிட்டுச் சொன்றாற்போல, நெடுநாள் முதலாக எம்மோடு வளர்ந்து வந்ததான நாணத்தையும் யாம் நின்னாற் கைவிட்டேம். இனி, இவ்வூரிடத்தே அலரும் எழுவதாக! கருத்து: ஊரலர் எழுதலால் மணந்து வாழ்தலே செயற்குரிய பண்பாகும்' என்பதாம். இனித் தலைவியை சொற்பொருள்: மூரி - பெரிய. நுணங்குதல் - வளைதல்; மணல் மேட்டினின்றும் எழுகின்ற காற்று மென்மணலை எடுத்துச் செல்லும்போது அலையலையாகத் தோற்றும். அந்தக் காட்சியை, நுணங்கு துகில் நுடக்கம்போல என்றனர். கணம் கொள - மிகுதிப்பட. ஊதை வாடைக் உரவு - வலிமை நலம் - பெண்மை நலம். சேணும் - நெடுங் காற்று. காலத்தும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/37&oldid=1627159" இலிருந்து மீள்விக்கப்பட்டது