உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

37


விளக்கம் : "நீ புணர்ந்தனையேம் யாம் ஆயின் நினக்கு எம்பால் அன்பின்மை தோன்றாது; எம்மைக் குறித்து அலரெழும் இக்கட்டிலிருந்து எம்மை விடுவிக்கக் கரு னாயாய் வரைந்து கொள்ளலில் முனைவாய். ஆயின், நீயோ அவ்வாறு கருதினாயல்லை. என்று, அலனைப் பழிக் கின்றாள் தோழி. 'அன்பை மறந்த நின்னை உறவு கொண்ட தன் பயன், உடனிருந்த நாணும் இதுகாலை நின்னாலே அகன்றது" எனவும் வருத்தத்துடன் கூறுகின்றாள். உள்ளுறை: *கடல் கொழித்து ஒதுக்கிய மணல் மேட்டினைக் காற்று அள்ளித் தூற்றி அலைக்கழிக்குமாறு போல, பெற்றோர் வளர்த்துப் பேணிய தலைவியின் பெண் மையை நின்னுறவு இதுகாலை அள்ளித் தூற்றி அலைக் கழிக்கும் செயலைச் செய்துவருகின்றது என்பதாம். அது நீங்குதற்கு வழியாவது, முறையாக மணந்து கோடல் ஒன்றே என்பதுமாம். பிறபாடங்கள்: 'நீ புணர்ந்தனையேம்' என்பது, 'நீ உணர்ந்தனையே' எனவும்: 'பேய் வாங்க' என்பது, 'ஒய்ய வாங்க' எனவும் வழங்கும்.

16. நல்லதற்கு உரியை! பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார். திணை : பாலை. துறை: பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவழுங்கியது. . [ (து -வி.) தலைவியை நீங்கிச்சென்று பொருளினைத் தேடி வருதலிற் செலுத்திய தன் நெஞ்சுக்குத் தலைவியை விட்டு நீங்குதற்கு மனமில்லாத தலைவன் ஒருவன், இவ்வாறு கூறுகின்றான். கூறியவனாகத், தன் பொருளார்வத்தையும் தடைசெய்து இல்லத்தேயே இருந்து, விடுகின்றான்.) புணரின் புணராது பொருளே பொருள்வயிற் பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச் செல்லினும் செல்லாய் ஆயினும், நல்லதற்கு உரியை-வாழிஎன் நெஞ்சே!-பொருளே, வாடாப் பூவின் பொய்கை நாப்பண் ஓடுமீன் வழியின் கெடுவ; யானே விழுநீர் வியலகம் தூணி ஆக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/38&oldid=1627160" இலிருந்து மீள்விக்கப்பட்டது