உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

நற்றிணை தெளிவுரை


எழுமாண் அளக்கும் விழுநிதி பெறினும். கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக்கண் அமர்ந்தினிது நோக்கமொடு செகுத்தனென்; எனைய ஆகுக! வாழிய பொருளே! 10 எனக்கே உரிமையான என் நெஞ்சமே! நீ வாழ்வாயாக! தலைவியை விட்டு நீங்காதே கூடியிருக்கப்பெறின், பொருட் செல்வமானது வந்து அடையாது. அந்தப் பொருட் செல் வத்தினைத் தேடிவருதற்கு இவளைப் பிரிந்து போயினம் ஆனாலோ, இவளோடு கூடிப்பெறுகின்ற அந்த இன்பமானது வாயாது. இவ்விரண்டு இக்கட்டுகட்கும் இடை யிலே, யாதானும் ஒன்றைத் தேர்ந்தாயாய், நீ பொருள்வயிற் செல்லினும் அன்றிச் செல்லாயாயினும், எது எனக்கு நல்ல தாயிருக்குமோ அதனையே செய்வதற்கு உரியையாவாய். பொருளானது, வாடாத பூக்களையுடைய பொய்கையிடத்து நின்றும் புதுநீர் வரத்தோடு ஓடிச்செல்லும் மீனினது நெறி யைப் போல, இடையிற் கெடுவதான ஓர் இயல்பினையும் உடையது. யானோ, பெருங்கடலாற் சூழப்பெற்ற இந்தப் பரந்த உலகத்தையே அளவு மரக்காலாகக் கொண்டு, ஏழு தடவைகள் அளக்கத்தக்க மாண்புடைய பெரிதான செல்வத் தைப் பெற்றாலும் அதனை விரும்பேன். கனவிய குழை யினை உடையாளுடைய, மாறுபட்ட செவ்வரி படர்ந்த குளிர்ச்சியான கண்கள், விருப்பமுடன் இனிதாக நோக்கும் அந்த நோக்கத்தினாலே பிளக்கப்பட்டவனாகவும் உள்ளேன். பொருள் எத்தன்மையது ஆயினும் ஆகுக! அதனைத் தேடி அடைதற்கு உரியாரிடத்தே சென்று அதுவும் வாழ்வதாக! புதுநீர் கருத்து: 'பொருளார்வத்தைக் கை விடுக' என்பதாம். சொற்பொருள்: ஓடுமீன் செல்லும் மீன்; குளத்தில் வந்து வீழக்கண்டு அதன் வழி ஏறிச்சென்று, இடை வழியில் வலைப்பட்டுச் சாகும் மீன். வியலகம் நிலன். அமர்த்த - மாறுபட்ட. அளவு - மரக்கால். - அகன்ற தூணி அளவு கருவி: விளக்கம்: தானிருந்த வளமான பொய்கையை விட்டுப் நாடி ஓடுகின்ற மீன். சென்றடைந்து இன்புறாமலும், இருந்த இடத்தை இழந்தும், டையிலே துயருட்பட்டும் நலிவதுபோல, யானும் இல்லிடத்து இவளிற்பெறும் இன்பத்தை இழந்தும், குறித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/39&oldid=1627161" இலிருந்து மீள்விக்கப்பட்டது