உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

39


ணை தெளிவுரை

பொருளினைச் சென்று அடையாமலும், இடையாகிய பாலை வழியிற் சிக்கித் துயர்ப்படுவேன்' என்கின்றான். சுனங் குழைக்கு மர்த்த கண்'- காதளவோடிய நெடுங்கண். பொருள் எணைய ஆகுக என்றது. அதனை நாடும் ருப்பத்தினைக் கைவிடுக' என்று உரைத்ததுமாம். 'தூணி' நான்கு மரக்கால் அளவுகொண்ட அளவுசால். இனிப் பொருள்தான் 'ஓடுமீன் வழியிற் கெடுவ' என்பதும் ஆம். பிற பாடங்கள் : "செல்லினும்' என்பது 'சேர்பினும் எனவும், 'செகுத்தனன்' என்பது 'செகுத்தனென்' எனவும் வழங்கும். 17. உரைத்தல் உய்ந்தனன்! பாடியவர்: நொச்சி நியமங்கிழார். திணை : குறிஞ்சி. துறை : முன்னிலைப் புறமொழியாகத் தோழிக்குச் சொல்லியது. தலைமகள் [ (து -வி.) பகற்குறிக்கண் வந்து கூடிச்செல்லும் தலைவன் ஒருநாள் வாராதுபோகத் தலைவிக்கு வருத்தம் மிகுதியா கின்றது. பிற்றை நாளிலே, குறியிடத்திற்குத் தோழியுடன் வந்திருந்த அவள், தலைவன் வந்து ஒருசார் ஒதுங்கி நிற்பது அறிந்து, தன் தோழிக்குச் சொல்வாள்போல, அவனும் கேட்டு உணருமாறு இவ்வாறு கூறுகிறாள்.] நாள்மழை தலைஇய நல்நெடுங் குன்றத்து மால்கடல் திரையின் இழிதரும் அருவி அகல்இருங் கானத்து அல்குஅணி நோக்கித் தாங்கவும் தகைவரை நில்லா நீர்சுழல்பு ஏந்துஎழில் மழைக்கண் கலுழ்தலின், அன்னை 'எவன்செய் தனையோ?நின் இலங்குஎயிறு உண்கு'என. மெல்லிய இனிய கூறலின் வல்விரைந்து, உயிரினும் சிறந்த நாணும் நனிமறந்து உரைத்தல் உய்ந்தனனே தோழி! சாரல், காந்தள் ஊதிய மணிநிறத் தும்பி தீம்தொடை நரம்பின் இமிரும் வான்தோய் வெற்பன் மார்புஅணங்கு எனவே. 5 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/40&oldid=1627162" இலிருந்து மீள்விக்கப்பட்டது