உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

65


[(து-வி.) தலைவனுக்குக் குறை நேர்ந்தாளான தோழி. தான் நயமாகப் பலபடக் கூறியும். தன்

சொற்களை உணராது தலைவி மயங்குதலைக் காண்கிறாள். அதன்மேல் வெளிப்படையாகவே இவ்வாறு கூறிக் குறைநேர்கின்றாள்.]

'மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன், வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி அம்மலை கிழவோன் நம்நயந்து என்றும் வருந்தினன்' என்பதுஓர் வாய்ச்சொல் தேறாய்; நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி,

அறிவறிந்து அளவல் வேண்டும்; மறுத்தரற்கு அரிய வாழி, தோழி! பெரியோர்

நாடி நட்பின் அல்லது

நட்டு நாடார்தம் ஓட்டியோர் திறத்தே.

LO

5

தோழீ! நீ வாழ்வாயாக! 'மாயவனைப் போலத் தோற் றும் கருமையான பெரிய மலைப்பக்கத்திலே, அவனுக்கு முன்னோனான. வெண்ணிறப் பலராமனைப் போன்றதாக விளங்கிய வெள்ளருவியானது இழிந்து கொண்டிருக்கும். அத் தன்மையுடைய அழகிய மலைக்கு உரியவன் தலைவன். அவன், எந்நாளும் நம்மை விரும்பியவனாகப் பெரிதும் வருந்தினனாயிருந்தான்! இவ்வாறு கூறிய எனது ஒப்பற்ற வாய்ச்சொற்களின் உண்மையினை நீ தெளியாயாய் உள்ளனை! இனி நீயும் அவன் துன்புறுதலை நீயாகவே நேரிற் கண்டும். அதனைக் குறித்து நின்பால் என்னினும் அன்புடைய ஆயத்தாரோடும் கலந்து உசாலியும் அறியவேண்டும். அறிவுத் தெளிவினை அறிந்ததன் பின்னரே; யானும் நின்னோடு அவனைப்பற்றி அளவளாவுதல் வேண்டும். அவனது நிலையோ மறுத்துக் கூறுதற்கு அரிதான ஒரு தன்மையாகும். அறிவுசான்ற பெரியோரை நாடிச் சென்று நட்புச் செய்து அவர்பால் ஆய்ந்து ஒன்றைத் தெளிவதன்றித், தம்மை வந்து நட்பு செய்து தம்மோடு நெருக்கமுடையாரின்பால், யாருமே எதனைக் குறித்தும் ஆராயமாட்டார்கள். இதனையும் நீ அறிவாயாக!

கருத்து: 'இனி, அவனது காதலை நினக்குக் கூறுதலால் யாதும் பயனில்லை' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/66&oldid=1627188" இலிருந்து மீள்விக்கப்பட்டது