உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

நற்றிணை தெளிவுரை


உண்போர் அதனாற் களித்து ஆரவாரித்திருப்பர். இவ்வாறான, நிரம்பிய ஆரவாரத்தையும் புதுவருவாயினை யும் உடையதுதான் நம் ஊர் என்றாலும் தேரூர்ந்துவந்து அருளுகின்ற சிறப்புடையானாகிய, மெல்லிதான கடல் நாட்டானாகிய நம் தலைவன், நம்மைப் பிரிந்தானாயின், இவையனைத்தும் பொலிவழிந்தாற்போல நமக்கு வருத்தத் தைத் தருவனவும் ஆகின்றதே! இதற்கு என் செய்வேன்?

கருத்து : தலைவன் பிரியின், ஊரும் அதன் வளமும் எனக்கு வருத்தத்தையே மிகுவிக்கின்றன' என்பதாம்.

வகை

சொற்பொருள்: வேட்டம்- மீன்வேட்டை. வளம் - வலைப்படும் மீனின் மிகுதி. பாட்டம் - அரசுக்கு ஊருக்கும் தரும் இறைப்பகுதி. தீம்பிழி - இனிதான கள் 'காண்ட வாயில்' - ஓர் ஊர். 'பாட்டம்' மழைவளமு ஆகும்.

விளக்கம்: கடல்வளமும் மழைவளமின்றி ‘அமைய தாதலின், 'பாட்டம் பொய்யாது' என்பதற்கு, மழைவளமு கடல்வளம் பெருகுதற்கு உதவும் வகையினாலே, பொய் படாது மிகுந்திருக்கும் எனவும் கொள்ளலாம். மீன்விலை பகர்வாரது ஆரவாரமும், கள்ளுண்டு களித்தாரது ஆரவாரமுமாக, ஊர்மன்றம் 'ஆர்கலி யாணர்த்தாயிற்று. வேட்டம் பொய்யாது வலைவளம் சிறப்பவும், பாட்டம் பொய்யாது பரதவர் பகரவும் நிகழ்கின்றதேனும், தலைவன்

து

நம்மை மணம்வேட்டு வருவதென்பது பொய்த்தது; நம்மவர் நம்மை அவனுக்குத் தருவரென்பதும் பொய்யாயிற்று; பனந் தீம்பிழி உண்போர் மகிழ்தலைப்போல யாம் அவனுடன் காமவின்பத்தை உண்டுகளிப்பேம் என்பதும் வாயாதாயிற்று என்று தலைவி நோகின்றாள்

பிற பாடம்: 'தேர்கெழு' என்பது, 'தோடு கெழு எனவும் கூறப்படும். அதற்குத் 'தொகுதி விளங்கிய' என்று பொருள். 'தொகுதி விளங்கலாவது, இன்னின்னார்க்குரியது என்ற வரையோடு விளங்கும் கடற்கரைப் பகுதியாகும்.

39. கூடலன்ன தோள்!

பாடியவர் : மருதனிள நாகனார். திணை : குறிஞ்சி, துறை : இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியிலே, தலைவன் சொல்லியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/79&oldid=1627201" இலிருந்து மீள்விக்கப்பட்டது