உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

நற்றிணை தெளிவுரை


சென்மழை இயக்கங்காணும் நன்மலை நாடன்' எனவே, இரவுக்குறி வாய்த்தலும் அரிதாகலால். இனி அவளை வரைதல் ஒன்றே செய்யத்தக்கது என்பதும் கூறினான்.

உள்ளுறை : 'குறவர் மின்மினி விளக்கொளியா சென்மழை இயக்கத்தைக் காணுமாறு போல, நீயும் அவளது அக் குறிப்பினாலே அவளது உள்ளத்தையும், அவளது குடிப்பெருமையையும் கொண்டு, அவளை அவளை அடைதற்கான வழிவகைகளைக் காணல் வேண்டும்' என்பதாம்.

இறைச்சி : 'சென்மழை இயக்கங் காணும் நன்மலை நாடனாதலின், தலைவியது குறிப்பாலே அவளது நிலையைக் கண்டறிந்து, அவளை இற்செறித்தனன் அவள் தந்தை' என்று கொள்க.

45. நும்மொடு பொறுந்தாது!

பாடியவர் :... திணை : நெய்தல். துறை: குறை... வேண்டிய தலைவனைத் தோழி சேட்படுத்தது.

இசைதற்கு

(து .வி.) தோழி மூலம் தலைவியை அடைவதற்கு முயன்றான் ஒரு தலைவன். அவனுக்கு விரும்பாத தோழி, இவ்வாறு கூறியவளாக, பெரிதும் விலகிப் போகச் சொல்லுகின்றாள்.]

இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு மீன்எறி பரதவர் மகளே; நீயே,

நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க் கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே; நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி, இனப்புள் ஓப்பும் எமக்குநலன் எவனோ? புலவு நாறுதும் செலநின் றீமோ!

பெருநீர் விளையுள்ளம் சிறுநல் வாழ்க்கை

நும்மொடு புரைவதோ அன்றே;

எம்ம னோரில் செம்மலும் உடைத்தே!

அவனைப்

5

10

ஐயனே! நீ அடைதற்கு நினையும் இவள்தான், கானற்

சோலையிடத்துப் பொருந்திய அழகிய

சிறு குடியினைச் சேர்ந்தவள்: நீலநிறப் பெருங்கடலும் கலங்குமாறு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/91&oldid=1627213" இலிருந்து மீள்விக்கப்பட்டது