உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

101


ள்ளுறை : 'மன்றப் புன்னை மாச்சினை நறுவீ.

முன்றில் தாழையொடு கமழும்

penst*

என்றதனால், அவ்வாறே இவ்விடத்தாளாகிய நீயும் அவ்விடத்தானாகிய அவனுடன் அவனில்லிற் கூடியிருந்து இல்லறமாற்றுவாய்' என்றனள்.

50. பெருமையும் சிறுமையும்?

பாடியவர் : மருதம் பாடிய இளங்கடுங்கோ. திணை: மருதம். துறை: தோழி பாணற்கு வாயில் மறுத்தது.

[(து-வி.) பரத்தை காரணமாகத் தலைவியைப் பீரிந்து சன்று சின்னாளிருந்த தலைவன், மீண்டும் தலைவியை நாடியவனாகப் பாணனைத் தூது விடுக் கின்றான். அப் பாணனிடம், 'தலைவி தலைவனை ஏற்பதற்கு விரும்பாள்' எனத் தோழி வரவு மறுத்துக் கூறுகின்றாள்.]

அறியா மையின், அன்னை! அஞ்சிக்

குழையன் கோதையன் குறும்பைந் தொடியன் விழவுஅயர் துணங்கை தழூஉகம் செல்ல. நெடுநிமிர் தெருவில் கைபுகு கொடுமிடை,

நொதும லாளன் கதுமெனத் தாக்கலின்,

'கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று'என,

'யாணது பசலை' என்றனன்; அதன் எதிர்,

'நாண்இலை, எலுவ!' என்றுவந் திசினே -

செறுநரும் விழையும் செம்மலோன் என,

நறுநுதல் அரிவை; போற்றேன்,

சிறுமை பெருமையின் காணாது துணிந்தே

5

10

அன்னையோ! குழையணிந்தோனாகவும், கோதை சூடி யோனாகவும். குறிய பலவாய வளைகளை அணிந்தோ னாகவும், பெண்மைக் கோலத்தைப் பூண்டு ஒருவன் சேரிப் பரத்தையரோடு துணங்கைக் கூத்தாடியிருந்தான். அக் களத்திடத்தே யானும் கூத்துக் காண்பாளாக ஒரு நாட் சென்றேன். அவனை அங்குக் கண்டதும் அஞ்சியவளாக அவ்விடத்தை விட்டு அகன்றேன். நெடிதாக நிமிர்ந்த தெரு முனையிலே, எதிர்ப்பட்டு வருவார். ஒருவர் கையிடத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/102&oldid=1627224" இலிருந்து மீள்விக்கப்பட்டது