உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

105


கண்டவள். அக்காட்டூடு

விளக்கம்: பெயலைக் இரவினும் வருதலையுடையானாகிய தலைவனை நினைந் தாளாய், அவனுக்கு வரும் ஏதத்தைக் கருதித் தளர்ந்தாள். அதனால் வேறுபட்ட அவள் மேனியைக் கண்ட அன்னை. முருகு அணங்கிற்றென வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்தாள், வெறியயரும் வேலனும் வந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றான். இனித் தலைவியை முன்னிறுத்தி அவள் கூந்தலிற் பூவை எடுத்துப் போட்டுப் பரவுக்கடன் தருதலும் நிகழும். இதற்கிடையே ஒரு பக்கமாக ஒதுங்கி நிற்கும் தலைவியும் தோழியும் தலைவன் வந்து ஒருசார்

ஒதுங்கி நிற்பதைக் காணுகின்றனர். தம் நிவையை

உணர்த்தித் தம்மைக் கைவிடாது காக்குமாற்றான் விரைய வரைந்துவருமாறு அறிவுறுத்தவும், அந்நிலையே அவ்விடத்தை விட்டுப் போக்கவும் நினைக்கின்றனர். இந்த நினைவோடு தோழியிடத்துக் கூறியதாக அமைந்த செய்யுள் இது.

உள்ளுறை : பெருந்தண் குளவி குழைத்த பாவடிக் கொல்களிறு தலைவியைக் களவிற்கூடிப் பிரிந்து அவளது நலத்தைச் சிதையுமாறு செய்த தலைவனாகவும், இருஞ் சேறாடிய நுதலதாக அது ஆகியது அலருரையாற் பழியேற்ற தன்மையனாக அவன் ஆகியதனையும், பேதை ஆசினியை ஒசித்தது வரைந்துவரும் முயற்சியிலே செல்லாது களவையே நாடி வந்து இன்பத்தை இழக்கச்செய்து வருத்தியதையும், வீததர் வேங்கையடியிலே நின்றது வெறியயர் களத்திலே முருகைப்போல வந்து நிற்கும் நிலையினையும் குறிப்பன வாகக் கொள்க இனி, வேங்கை பூக்கும் காலம் ஆதலின் அதுவே மணத்திற்கான காலமென்பதை இதன் மூலம் உணர்த்தினளாகவும் கொள்க.

52. நீங்க மாட்டோம்!

பாடியவர்: பாலத்தனார். திணை : பாலை. துறை : தலைமகன் செலவு அழுங்கியது.

[(து-வி.) தலைவியைப் பிரிந்து பொருள்தேடி வருதலிற் செல்லுதற்குத் தன் மனம் தூண்டுதலைச் செய்யத், தலைவி யைப் பிரிந்து போதற்கு இயலாதும், பொருளார்வத்தை ஒதுக்குதற்கு முடியாதும் துன்புறுகின்றான் ஒரு தலைவன். முடிவில், தலைவியின் நினைவே வெற்றி பெறுகின்றது.

ந.7.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/106&oldid=1627228" இலிருந்து மீள்விக்கப்பட்டது