உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

நற்றிணை தெளிவுரை


அதற்கு

மணத்தை உடையையோ?' எனவும் வினவினாள். எதிருரை சொல்லமாட்டாத நிலையளாகி வருத்தமுற்று இவளும் என் முகத்தை நோக்கினாள். 'அன்னையைத் தளிவிக்கும் வகையை எப்படி அறிந்து இலள் பிழைக்கப் போகின்றாளோ!" என யானும் கலங்கினேன். அடுப்பி லிட்டிருந்த சந்தன விறகின் கொள்ளியைக் காட்டியவாறே, இதனை அடுப்பிலிட, இதன்பாலிருந்த வண்டுகள் அகன்று போய், இவள் தோள்களிலே மொய்த்தன, அன்னாய்' என்றும் கூறினேன்.

கருத்து: 'இனியும், இவளது பிரிவுத் துயரையும் களவு உறவையும் அன்னைக்கு மறைத்தல் அரிது' என்பதாம்.

சொற்பொருள்: வாய்மை - வாய்மை தோன்றக் கூறிய சொற்கள்; அதனை அவன் பொய்த்து ஒழுகலின் 'ஒழிக' என்றனள். காம்பு - மூங்கில். பொறி திருமகள்; அழகு; தேமற்புள்ளிகளும் ஆம். கோள் - கொல்லுதல். ஞெகிழி கொள்ளி.

விளக்கம்: ஒழிக நின் வாய்மை' என்றது, பன்னாளும் வரைந்து வருவதாகக் கூறிய உறுதிமொழிகளைப் பொய்த்த தனால். 'பண்டும் இனையையோ? என வினவியது, அவள் பெற்ற புது மணத்தைக் கண்டு வினவியதாம் அது சந்தனச் சாந்தின் மணம் என்பதும் விளங்கும். அல்லாந்து - வருந்தி, இவற்றாற் களவு பற்றிய ஐயம் அன்னைக்கு உண்டாயிற்று எனவும், அதனால் இற்செறிப்பு நிகழும் எனவும், இனி வரைந்து கொண்டாலன்றித் தலைவியைப் பெறமுடியா தெனவும் உணர்த்துகின்றாள் தோழி. இவற்றைக் கேட்பா னாகிய தலைவன் இனியும், வாய்மை தவறாது' வரை தலிலே முற்படும் திண்மையன் ஆவான்' என்பதாம்.

மேற்கோள்: செவிலி வினாவியமையைத் தோழி கொண்டு கூறினாள்' என இச் செய்யுளைக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ. 115. உரை), இதனால் செவிலி வினவியதாகச் சொன்னது படைத்து மொழிதல் என்றறிக.

56. நெஞ்சம் எங்கே!

பாடியவர் : பெருவழுதி. திணை : பாலை. வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழிக்குத் சொல்லியது.

துறை :

தலைவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/113&oldid=1627235" இலிருந்து மீள்விக்கப்பட்டது