உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

நற்றிணை தெளிவுரை


சொற்பொருள் : குறுநிலை - குறுகிய நிலை: மரத்தின் குறுமையைக் கூறியது. இரவு - குராமரம். அசாவா - தளரா, பொன்நிறம் - துத்தி படர்ந்ததாவே வந்துற்ற நிறம்.

விளக்கம்: குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவி, வண்டுதரு நாற்றம் வளிசுவந்து ஈயக் கண் களி பெறூஉம் கவின்பெறு காலை' என்றது, முன்பு தலைவன் வரைவிடை வைத்துத் தன்னைத் தெளிவித்தகன்ற குறியிடத்தின் செவ்வியை நினைத்து கூறியதாம். 'கண் களிபெறூஉம் கவின் பெற்றது' காட்டிடம் எங்கணும் என்க. அவரைப் பிரிய மாட்டாது' அவருடனே சென்ற நெஞ்சம். என்னை முற்றவும் மறந்ததாய். அவரோடு தானும் வருதலைக் கருதினதாய், அங்கேயே இருக்கின்றதோ; அன்றி என்பால் வந்தும் என் மேனி வேறுபாட்டால் என்னை யாளென அறியாதே போய் என்னைத் தேடித் திரிகின்றதோ?' இப்படி நோகின்றாள்

தலைவி.

மேற்கோள்: பிரிந்த *பிரிந்த வழிக் கலங்கினும்' என்னும் துறைக்கு இச் செய்யுளை மேற்கோள் காட்டியுள்ளனர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ. 111 உரை).

57. உள்ளம் மருளும்!

பாடியவர்: பொதும்பில் கிழார். திணை : குறிஞ்சி. துறை: செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.

[(து-வி.) பகற்குறியிவே வ வருகின்றோனா தலைவனுக்கு, இனித் தலைவி இற்செறிக்கப் படுவாள் என றிவுறுத்தி வரைந்து கொள்ளுமாறு தூண்டுகின்றாள் தோழி.]

தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாநிரைக் குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தெனத் துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்தி கல்லென் சுற்றம் கைகவியாக் குறுகி வீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பால் கல்லா வன்பறழ்க் கைக்நிறை பிழியும். மாமலை நாட! மருட்கை உடைத்தே-

செங்கோல், கொடுங்குரல் சிறுதினை வியன்புனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/115&oldid=1627237" இலிருந்து மீள்விக்கப்பட்டது