உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

117


பறையினது கண்ணகத்தே எழுதப்பட்டுள்ள குருவியானது அடிக்கப்படுதலைப்போலப், பாகனாற் கோல்கொண்டு அடித்து வருத்துதலினாலே துன்பப்படுவன வாசு!

கருத்து: 'நீ போகத் தலைப்படினும், நின் குதிரைகள் அடித்து ஓட்டப்படினும் செல்லாவாகுக' என்பதாம்.

சொற்பொருள்: பெரு முது செல்வர் - பழைதாகவரும் பெருஞ்செல்வத்தை உடையோர். அரிப்பறை - அரித்தெழும் ஓசையைக் கொண்ட சிறுபறை. சுண்ணகம் - அடிக்கப்படும். இடம். வேண்மான் - வேளிர்குலத் தலைவன். வெளியன் தித்தன் - வெளியனின் மகனாகிய தித்தன். கோடு - சங்கு. கையற - செயலற.

விளக்கம்: பகற்போதிலே தலைவனோடிருந்து இன்புற்ற தலைவி, இரவிலே தனிமையால் பெரிதும் வாடி. நலிவாள் எனவும். அதனால் தலைவன் இரவிலும் தங்கிப் போதல் வேண்டுமெனவும் வற்புறுத்துவாள் போலத், தோழி இவ்வாறு கூறுகின்றாள். இரவில், அவளூரில் அவன் தங்கிச் செல்வதென்பது அவளை மணந்து கொண்டதன் பின்னரன்றி இயலாது ஆயினமையின், வரைவினை வேட்டுக் கூறுகின்றாள் எனவே கொள்ளல் வேண்டும்.

மாலைப்போதிலே நுண்பனி அரும்புதலைக் கூறியதால், கூதிர்ப்பொழுது என்பதும், இரவிடை முயக்கம் அதுகாலை இன்றியமையாதாய்த் தோன்றும் என்பதும் பெறவைத்தனள். 'மெய் சோர்ந்து அவல நெஞ்சினம் பெயர' என்றது, அவனைப் பிரிதலால் தாமுறும் தளர்வைச் சுட்டிக் கூறிய தாம். 'மா கோல் கொண்டு அவைப்பப் படீஇயர்' என்றது, அவை தாம் செல்லாவாகுக என்பதாம்; அவை செல்லாவாக, அவனும் வேறு போதற்கு வழியின்றி இரவில் தங்குதலை நேர்வான் என்பதாம். 'கண்ணகத்து எழுதிய குரீஇ' என்பது, பறைக்கண்ணகத்தே தீட்டப்பெறும் ஓவியமாம்.

மேற்கோள்: ‘பகற்குறி வந்து போகின்ற தலைவன் புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவி குறிப்பறிந்து, மாவின் மேல் வைத்து வற்புறுத்தது என, இச் செய்யுளை மேற் கோளாகக் கொண்டனர் நச்சினார்க்கினியர் (தொல்.

பொருள். சூ. 114 உரை.)

பிறபாடம்: பெறுமுது செல்வர்"-நல்லூழாற் பெற்ற பழைமையாக வரும் செல்வத்தை உடையோர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/118&oldid=1627240" இலிருந்து மீள்விக்கப்பட்டது