உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

151


விளக்கம் : 'வரு மழை சரந்த வால்நிற விசும்பு' என்றது, அவ்விடத்தேயாக வரும் மேகத்தையும் கோடை வெம்மை நீர்வற்றச் செய்துவிட்டதாக, அதுவும் வெண்ணிறம் பெற்றதாய், அதனால் வானமும் வெண்ணீற வானமாயிற்று' என்பதாம். 'நுண் துளி மாறிய' என்பதும் இது. மேகத்தின் நுண்துளிகளும் தரைக்கண் வீழா முன்னரே இடைக்கண் ஒழிந்தன என்பதாம். 'அம் காடு' என்றது. அப்படிக் கொடிய வெம்மை கொண்டிருப்பினும், அவள் உடன் வருதவானே அழகிதாயிற்று என்பதாம். 'ஆல நீழல்' அப்படிப்பட்ட கோடையிலும் ஆலமரம் நிழல் தருதலைப் போல, அவளும் தனக்கு இனிமை தருகின்றாளாயினாள் என்பவன், 'ஆலநீழல் அசைவு நீக்கி' என்கின்றான். 'வாலிழைக் குறுமகள்' என்றது, அவளது செல்வச் செழுமையினையும், அவளது மென்மைத் தன்மையினையும் சுட்டிக் கூறியதாம். 'புன்னை வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலலின்' என்றது, 'புலவினை உணக்கலால் எழுகின்ற புலால் நாற்றத்தையும் அடங்கச் செய்தபடி புன்னைப் புதுமலரின் புதுமணம் பரவி நிற்கும் என்றதாம்'. அவ்வாறே, தலைவியது உடன்போக்கால் எழுந்த பழிச்சொற்கள்தானும் தலைவி தலைவனுடன் அவனூரிலே மணம் பெற்று வாழ்கின்றாள் என்னும் செய்தியான் அடங்கிவிடும் என்பதாம். 'கல்உறச்சிவந்த மெல்லடி' என்றது, அவளது நடை வருத்தத்தைக் கண்டு அதனை மாற்றக் கருதினனாகிய மனநெகிழ்வால் எழுந்ததாம். "அஞ்சுவழி அஞ்சாதே" என்றது, தன் ஆண்மையின் உறுதுணையாகும் திறனைக் காட்டிக் கூறியதாம்; அவளைக் காக்கும் கடனைத் தான் மேற்கொண்டதான உரிமையினைச் சுட்டிக் காட்டிக் கூறியதுமாம். புன்னை பூத்து மணம் பரப்பும் காலம், நெய்தற் பாங்கிடத்து இளமகளிர்க்கு மணம் நிகழ்த்தற்குரியதான காலம், என்பதனையும், அது குறித்துக் கூறியதனாலே அவர்களின் மணம் விரைவில் அவனூரிடத்தே நிகழும் என்பதனையும் அறிதல் வேண்டும்.

77. மகிழ் மட நோக்கம்!

பாடியவர் : கபிலர்
திணை : குறிஞ்சி.
துறை : பின்னின்ற தலைவன் நெஞ்சிற்கு உரைத்தது

(து–வி.) தலைவன் ஒருவன் தலைவியைக் கண்ணுற்றுச் செயலிழந்த நெஞ்சினனாயினான். அவளைத் தனக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/152&oldid=1679053" இலிருந்து மீள்விக்கப்பட்டது