உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

நற்றிணை தெளிவுரை


இவ்வாறு தலைவியர் குயிலின் குரலினைக் கேட்டுத் துன்புறுதலைக் குறுந்தொகை 182ஆவது செய்யுளானும், நற்றிணை 118, 157 செய்யுட்களானும் அறிக. 'அந்தளிர் மாஅத்து அலங்கல் மீமிசைச், செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம் இன்னிளவேனிலும் வாரார்; இன்னே வருதும் எனத் தெளித்தோரே' என வரும் அகநானூற்றுச் சீத்தலைச் சாத்தனாரின் சொற்களும் இதனை வலியுறுத்துவதாம்.

உள்ளுறை : "வண்டு சூழ் மலர் வட்டியளாகத் திரிகின்றவளைக் காண்பேன்; ஆயின், என்னை இன்புறுத்துதற்கான காதலரைத்தான் வரக்காணேன்" என்பதாம்.

98. கண்ணும் நெஞ்சும் கொடிது!

பாடியவர் : உக்கிரப் பெருவழுதி.
திணை : குறிஞ்சி.
துறை : இரவுக்குறி வந்து ஒழுகும் தலைவனைத் தோழி வரைவு கடாயது.

[(து–வி) இரவுக்குறியிலே தலைவியைக் கூடிப் பெறுகின்ற இன்ப நாட்டத்தினனாக வந்தொழுகும் தலைவனைத் தலைவியை மணந்து இல்லிடத்திருந்து கூடி வாழும் அறவாழ்வு முயற்சியிலே செலுத்த நினைந்த தோழி, இவ்வாறு கூறுகின்றாள்.]

எய்முள் அன்ன பரூஉமயிர் எருத்தின்
செய்ம்ம் மேவல் சிறுகட் பன்றி
ஓங்குமலை வியன்புனம் படீஇயர், வீங்குபொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, 5
மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்
கல்லளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடியுடை வியனகர்த்
துஞ்சாக் காவலர் இகழ்பதம் நோக்கி,
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே— 10
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு, வாராஎன் நார் இல் நெஞ்சே!

முட்பன்றியின் முள்ளைப்போலத் தோற்றும் பருத்தமயிரடர்ந்த பிடரையும், சிறுத்த கண்களையும் உடையதான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/193&oldid=1708238" இலிருந்து மீள்விக்கப்பட்டது